தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரியில் துவங்கியது நீர் பனிப்பொழிவு: மக்கள் அவதி!

4 Nov 2026, 12:00 am
நீலகிரியில் துவங்கியது நீர் பனிப்பொழிவு: மக்கள் அவதி!

நீலகிரியில் துவங்கியது நீர் பனிப்பொழிவு: மக்கள் அவதி!

உதகை, நவ.3-நீலகிரியில் நீர் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால், இரவு நேரத்தில் நிலவும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல்ஜனவரி மாதம் வரை பனிக்காலம்

நிலவும். கடந்த சில மாதங்களாக காலநிலை மாறுபாடு காரணமாக, நீலகிரியில் தென்மேற்கு, வட

கிழக்கு பருவமழை தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ தொடங்குகிறது. இதற்கிடையே இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. மேலும், 2 வாரங்களுக்குமுன் தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த வாரத்தில், அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. நீலகிரியை பொருத்தவரை வழக்கமாக செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் நீர் பனிப்பொழிவும், நவம்பர் மாதத்தில் உறைபனி தாக்கமும் தொடங்கும். ஆனால், காலநிலை காரணமாக அக்டோபர் மாதத்தில் மழை தொடர்ந்ததால், நீர் பனி தொடங்கவில்லை. கடந்த 4 நாட்களாக நீலமழை குறைந்து பகல் நேரத்தில் நன்றாக வெயில் அடித்து வருகிறது, இரவு நேரத்தில் குளிர் இருக்கிறது. இதன் காரணமாக தற்போது உதகையில் நீர் பனிப்பொழிவும் தாமதமாக நவம்பர் மாதத்தில்தொடங்கியுள்ளது. நீர்நிலைகள் அருகே உள்ள புல் மைதானங்கள்,காந்தல் பகுதி, தாவரவியல் பூங்கா,மார்க்கெட் பகுதி, பழைய குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிக

மாக இருந்தது. அவலாஞ்சி பகுதியில் அதிக அளவு இருந்தது. அதேபோல் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர்பனி அதிகளவில் காணப்பட்டது.

தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் நீர்த்துளிகள் வழக்கத்தை விட அதிகமாக இருந்தன. உதகை நகரில் புல்வெளிகளில் நடைபயிற்சி செய்தவர்களின் காலணிகள் நீர் பனியால் நனைந்தன.

நீர் பனிப்பொழிவு காரணமாக இரவுநேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகையில், செவ்வாயன்று அதிகாலை நேரத்தில் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பகல் நேரத்தில் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 74 சதவீதம் இருந்தது. இதனால் பொதுமக்கள் நெருப்பு

குளிர் காய்ந்து வருகின்றனர். நீலகிரியில் இந்த ஆண்டு உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.