சிஐடியு போராட்ட அறிவிப்பால் நீலகிரி ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகை விநியோகம்
16 Jul 2026, 10:12 pm
<p><strong>சிஐடியு போராட்ட அறிவிப்பால் நீலகிரி ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகை விநியோகம்</strong></p><p>உதகை, ஜூலை 16- குன்னூர், கூடலூர் அரசு மருத்து வமனை ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு குறைத்து வழங்கப்பட்ட சம்பள நிலுவைத் தொகையை வழங்க ஒப்பந்ததாரர் முன் வந்ததை அடுத்து, சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த காத்தி ருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற் றும் கூடலூர் அரசு மருத்துவமனை களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழி லாளர்களுக்கு கடந்த மே மாத சம்பளம் குறைவாக வழங்கப்பட் டது. அப்போது நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக, முழுமையான சம்பளம் வழங்க ஒப் பந்ததாரர் உறுதியளித்தார். ஆனால், ஜூன் மாத சம்பளமும் கடந்த 10-ஆம் தேதி மீண்டும் குறை வாக வழங்கப்பட்டது. இதனைக் கண்டித்து, ஜூன் மாத சம்பள குறைப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை அமல்ப டுத்த வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி, சிஐடியு சார்பில் ஜூலை 15 முதல் குன்னூர், கூடலூர் அரசு மருத்துவமனை வளாகங்க ளில் தொடர் காத்திருப்புப் போராட் டம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர் தரப்பில் முதற்கட்டமாக 50 சதவீத சம்பள நிலுவைத் தொகை உடனடியாக தொழிலாளர்களின் கணக்கில் செலுத்தப்பட்டது. மீதமுள்ள 50 சத வீத நிலுவைத் தொகையையும் உட னடியாக வழங்குவதாக ஒப்பந்த தாரர் உறுதியளித்தார். இதுகுறித்து சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் சி.வினோத் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், சிஐடியு முன் னெடுத்த உறுதியான போராட்டத் திற்கும் கிடைத்த வெற்றியாகும். இதன் காரணமாக காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத் திவைக்கப்படுகிறது. அதேநேரம், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதி யம், இ.பி.எஃப்உள்ளிட்ட நியாய மான கோரிக்கைகள் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை எங்க ளது சட்டப்பூர்வப் போராட்டங்கள் தொடரும்,” எனத் தெரிவித்துள் ளார்.</p>
