நீலகிரியில் 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க வணிகர் சங்கத் தலைவர் வலியுறுத்தல்
14 Jun 2026, 1:56 am
<p><strong>நீலகிரியில் 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க வணிகர் சங்கத் தலைவர் வலியுறுத்தல்</strong></p><p>உதகை, ஜூன் 13- நீலகிரியில் நடைமுறையில் உள்ள மாஸ்டர் பிளான் விதிகளை தளர்த்தி, 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரம ராஜா வலியுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு கூட்டம், உதகை பிங் கர்போஸ்ட் பகுதியில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், நீல கிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் விதி முறைகளால் கட்டிட அனுமதி கிடைக் காமல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிறு விதி முறைகள் மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங் களுக்கு ஒரு முறை வரன்முறை வழங்கி, அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண் டும். உதகை மற்றும் குன்னூர் நகராட்சி மார்க்கெட் கட்டுமானப் பணிகளை வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப விரைவுபடுத்த வேண்டும். மற்ற மலை மாவட்டங்களிலும் பிற மாநிலங்களிலும் 10 மீட்டர் உயரம் வரை கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நீலகிரி யில் 7 மீட்டர் உயரம்தான் கட்டிடம் கட்டப் பட வேண்டும் என்ற விதிமுறைகளை தளர்த்தி 10 மீட்டர் உயரம் வரை கட்டிட அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும், கூடலூர் – மைசூரு ரயில் சேவையை தொடங்க, கூடலூரில் இருந்து நஞ்சன்கூடு வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு வியா பாரிகளையும். பொதுமக்களையும் கடுமையாக பாதிக்கிறது. வணிக பயன் பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை கூடி யது, சிறு வியாபாரிகளை மிகுந்த சிர மத்திற்குள்ளாக்கியுள்ளது. தமிழகத் தின் பல சிறிய கடைகள் மூடப்பட் டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட வியா பாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப் பீட்டுத் தொகை வழங்க வேண்டும். டீசல் விலை உயர்வால் லாரி வாடகை உயர்ந்ததால் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள் ளது. எனவே ஒன்றிய அரசு டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கொரோனா காலத்தில் இருந்தது போல வாகனங்களுக்கு விதிவிலக்கு வழங்கி கட்டணங்களை பெறக்கூடாது, என் றார்.</p>
