தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகை விடுவிப்பு சிஐடியு தலையீட்டுக்கு கிடைத்த வெற்றி!

12 Jun 2026, 10:25 pm
ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகை விடுவிப்பு  சிஐடியு தலையீட்டுக்கு கிடைத்த வெற்றி!

ஆஷா பணியாளர்களின் ஊக்கத்தொகை விடுவிப்பு சிஐடியு தலையீட்டுக்கு கிடைத்த வெற்றி!

உதகை, ஜூன் 12- நீலகிரி மாவட்டத்தில் அர்ப் பணிப்புடன் பணியாற்றி வரும் ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையை விடுவிக்காவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு படுவோம் என சிஐடியு அறிவித்த நிலையில், கடந்த மூன்று மாதங்க ளாக வழங்கப்படாமல் இருந்த நிலுவைத்தொகையை உடனடி யாக விடுவித்து மாவட்ட சுகாதா ரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சிஐடியு நீலகிரி மாவட்டச் செய லாளர் சி.வினோத் இதுதொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 500 ஆஷா பணியாளர்கள் கர்ப்பிணிப் பெண்களின் நலன் காக்கும் பணி களிலும், கிராம சுகாதார ஊழியர்க ளுக்கு இணையாகவும் மிகத் தீவிர மாகப் பணியாற்றி வருகின்றனர். போக்குவரத்து வசதிகள் இல்லாத அடர்ந்த கிராமப்புறங்களிலும், வனவிலங்குகளின் அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியிலும் தங்களின் உயி ரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் வேலை என்று கூறி பணிய மர்த்தப்பட்ட இவர்கள், தற்போது நாளொன்றுக்கு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார் கள். இவ்வளவு கடின உழைப்பை நல்கும் இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை; மாறாக, மாதம் வெறும் 5,000 முதல் 6,000 ரூபாய் வரையிலான மிகக் குறைந்த ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த குறைந்தபட்ச ஊக்கத் தொகையும் கடந்த மூன்று மாதங் களாக வழங்கப்படாமல் நிலுவை யில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் அலட் சியம் காட்டியதால், பணியாளர்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

இதனையடுத்து, ஆஷா ஊழியர்க ளின் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தி சிஐடியு மாவட்டக்குழு சார்பில் நீலகிரி மாவட்ட ஆட்சியரி டம் கடந்த செவ்வாயன்று மனு அளிக்கப்பட்டது.

மேலும், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கா விட்டால், உதகை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஊதியம் பெறும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று சிஐடியு அறிவித்தது. இதுதொடர் பாக தீக்கதிர் நாளிதழிலும் விரிவான செய்தி வெளியானது.

இந்நிலையில், சிஐடியுவின் இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் உடனடியாக நிலுவை ஊக்கத்தொகையை விடு வித்துள்ளது.

உதகமண்டலம் மாவட்ட சுகா தார அலுவலர் (பொறுப்பு) மருத்து வர் செ.சிபி, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள அதி காரப்பூர்வப் பதில் கடிதத்தில், பத்திரிகை செய்தியின் அடிப் படையில், உதகமண்டலம் சுகாதார மாவட்டத்தில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கான மார்ச் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்திற்கான ஊக்கத்தொகை, சென்னை தேசிய நலக் குழும இயக்குநரின் செயல்முறை ஆணையின்படி (ஆணை எண். 6950/P6/NHM/2019, நாள்: 29.05.2026), கடந்த 08.06.2026 அன்று SNA Sparsh-ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 09.06.2026 அன்று அனைத்து வட்டார மருத்துவ அலுவலகங்களாலும் பட்டியல் (Bill) தயார் செய்யப்பட்டு, 10.06.2026 அன்று தொடர்புடைய வட்டார கருவூலத்தில் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆஷா பணியாளர்களின் நிலு வைத் தொகையை வழங்காமல் காலம் கடத்திய அரசு நிர்வாகம், சிஐடியு-வின் வேலைநிறுத்தப் போராட்ட எச்சரிக்கைக்குப் பணிந்து, உடனடியாக கருவூலம் மூலமாக நிதியை விடுவிக்க நட வடிக்கை எடுத்திருப்பது ஒட்டு மொத்தப் பணியாளர்கள் மத்தியி லும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

நியாயமான போராட்டக் குரலுக்குக் கிடைத்த இந்த வெற்றி, உழைக்கும் வர்க்கத்தின் ஒற்று மைக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி என சிஐடியு மாவட்டச்செய லாளர் சி.வினோத் தெரிவித்துள் ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.