நீலகிரி - கோவை வாடகை வாகன ஓட்டுநர்கள் பிரச்சனை கோட்டாட்சியர் தலைமையில் சுமூக உடன்பாடு
18 Dec 2025, 5:31 pm
<p><strong>நீலகிரி - கோவை வாடகை வாகன ஓட்டுநர்கள் பிரச்சனை கோட்டாட்சியர் தலைமையில் சுமூக உடன்பாடு</strong></p>
<p>உதகை, டிச.18- நீலகிரி, கோவை மாவட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் பிரச்சனை சம்பந்தமாக உதகையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கோவையில் இயங்கி வரும் பிரபல தனி யார் வாடகை நிறுவனங்களின் கார்கள் வாயிலாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்று லாப் பயணிகளை அழைத்து வருவதால், சுற்றுலாவை நம்பியுள்ள எங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படுகிறது என நீலகிரி மாவட்ட வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வந்த னர். எனவே, கோவை தனியார் வாடகை வாகன நிறுவனங்களுடன் பலகட்ட பேச்சு வார்த்தை நடத்தி, புக்கிங் ஐ.டி., இல்லா மல் வாகனங்களை ஓட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை யெல்லாம் மீறி தொடர்ந்து தனியார் நிறுவன வாகனங்கள் நீலகிரிக்குள் வந்ததால், நீல கிரி மற்றும் கோவை வாடகை வாகன ஓட்டு நர்களிடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. சமீபத்தில், கோவையில் இருந்து நீலகிரிக்கு வந்த வாடகை வாகன ஓட்டுநர், திரும்பி செல் லும் போது பயணிகளை ஏற்ற முயன்றதால் தாக்கப்பட்டார். இதுகுறித்து உதகை போலீ சார் விசாரணை நடத்தி, நீலகிரியைச் சேர்ந்த வாடகை வாகன ஓட்டுநர்களை கைது செய்த னர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வாடகை வாகன டிரைவர்கள் மேட்டுப்பாளையம் கல்லாரிலும், நீலகிரி வாடகை வாகன டிரைவர்கள் உதகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுப்பதற் காக போலீசார் தலையிட்டு இருதரப்பினரை யும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் உதகை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற் றது. நீலகிரி கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் சவுந்தரராஜன், துணை காவல் கண் காணிப்பாளர் நவீன்குமார், வட்டார போக்கு வரத்து அதிகாரி பிரபாகர், தனியார் வாடகை வாகன நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கோவை நீலகிரி மாவட்ட தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், இதற்கு பின்னர் நீலகிரியில் இருந்து கோவைக்கும் கோவையிலிருந்து நீல கிரிக்கும் வரும் தனியார் வாடகை வாக னங்கள் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3500 வரை வசூலித்துக் கொள்ளலாம் என்றும், திரும்பி வரும்போது பயணிகளை ஏற்றக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சொந்தமாக வாகனம் வைத்துள்ள ஓட்டுநர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், பிரபல தனியார் நிறுவனங்களும் இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ள வலி யுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதத்தில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிலைப் பாட்டை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள் ளது. அதுவரை எந்த ஒரு வாகனத்தையும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஓட்டுநர்கள் சோதனை செய்யக்கூடாது. தேவைப்பட் டால் அருகில் உள்ள போலீசாரின் உதவியு டன் சோதனை செய்யலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக இரு மாவட்ட வாடகை வாகன டிரைவர்களின் பிரச் சனைக்கு தற்காலிகமாக சமூக தீர்வு கிடைத்துள்ளது. ஒருவேளை தனியார் நிறுவனங்கள் இதை ஏற்றுக் கொள்ளாவிட் டால், மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.</p>
