நீலகிரி வரையாடு எண்ணிக்கை 4.68 சதவீதம் அதிகரிப்பு!
6 Jun 2026, 9:26 pm

நீலகிரி வரையாடு எண்ணிக்கை 4.68 சதவீதம் அதிகரிப்பு!

வனத்துறை தகவல்

சென்னை, ஜூன் 6 - தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை கடந்தாண்டை விட 4.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது.

மாநில விலங்கான ‘நீலகிரி வரையாடு’ குறித்த கேரள வனத்துறையுடன் இணைந்த முதல் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே 01 ஆம் தேதி வரை 140 பகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,031 என மதிப் பிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 வரை 177 பகுதிகளில் நடத்தப்பட்டதில் தமிழ்நாட்டில் மொத்த நீலகிரி வரையாடு எண்ணிக்கை 1,303 என மதிப்பிடப்பட்டு உள்ளது.

நீலகிரி வரையாட்டின் மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, தமிழ்நாடு வனத்துறையால் நடப்பாண்டில் ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 வரை நான்கு நாட்கள் நீலகிரி வரையாடு காணப்படும் 14 வனக் கோட்டங் களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில், கடல் மட்டத்தி லிருந்து 270 எம்எஸ்எல் உயரம் முதல் 2,630 எம்எஸ்எல் உயரம் வரையிலான இடங்களில் நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,364 மதிப்பிடப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 4.68 சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டிலுள்ள மொத்த நீலகிரி வரையாடு இனத்தில் 44.87 சதவீதம் ஆனை மலைப் பகுதியில் காணப்படுகின்றன; அதே சமயம் நீலகிரி நிலப்பரப்பு 29.25 சதவீதத் தையே கொண்டுள்ளது. கணக்கீட்டில் ஆண்- பெண் விகிதம் 55:100 எனவும், பெண் குட்டி விகிதம் 100:66 எனவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.