தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரி கோடை விழா படகு போட்டியில் ஒசூரை சேர்ந்த தம்பதி அபாரம்

29 May 2026, 8:39 pm
நீலகிரி  கோடை  விழா படகு போட்டியில் ஒசூரை சேர்ந்த தம்பதி அபாரம்
<p><strong>நீலகிரி கோடை விழா படகு போட்டியில் ஒசூரை சேர்ந்த தம்பதி அபாரம்</strong></p><p>உதகை, மே 29- நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி, பழ கண்காட்சி மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளும், சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 23ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், கோத்தர், இருளர், படுகர் பாரம்பரிய நடனம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், கோடை விழாவின் ஒரு பகுதி யாக வியாழனன்று படகு போட்டி நடத்தப்பட்டது. இதில், தம்பதிகளுக்கான பிரிவில் ஒசூரைச் சேர்ந்த ஷேசாத்திரி, சங்கீதா தம்பதியினர் வெற்றி பெற்றனர். பெங்களூரை சேர்ந்த யோகேஷ் - அமிர்தா ஜோடி இரண்டாம் இடத்தை பிடித்தனர். சென்னையை சேர்ந்த சரவணகுமார், சுவர்ஷலட்சுமி ஜோடி மூன்றாம் இடத்தை பிடித்தனர். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த கோபி நாத், கீர்த்தி வாசன் முதல் இடத்தை பிடித்தனர். ராஜேஷ், லிப்பின் ஜோடி இரண்டாம் இடத்தையும், விவே கானந்தன் மற்றும் பிரகார்ஐடு ஜோடி மூன்றாம் இடத்தை பிடித்தனர். பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் யோய்பாபி மற்றம் லித்தோய் ஜோடி முதல் இடத்தையும், சென்னையை சேர்ந்த காவ்யா மற்றும் பிரியா ஜோடி இரண்டாம் இடத்தை பிடித்தனர். சென்னையை சேர்ந்த திவ்யா பாரதி மற்றும் ஜெயபாரதி மூன்றாம் இடத்தை பிடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளையும், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மணிப்புரி கலைக்குழுவினருக்கு நினைவு பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில், ஊட்டி கோட்டாட்சி யர் டினு அரவிந்த், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், உதவி சுற்றுலா அலுவலர் அஸ்வினி, படகு இல்ல மேலாளர் உதயகுமார், ஊட்டி வட்டாட்சியர் சதீஷ்வரநாயக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.