மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து!
14 hours before

மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து!

நீலகிரி, நவ.1-நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை ரயில் பாதையில் பாறைகள் மறறும் மண் சரிந்து விழுந்ததுடன், மரங்களும் பாதையின் குறுக்கே விழுந்து போக்குவரத்துக்கு தடையாக உள்ளன. இதனால் நீலகிரி மலை ரயில் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் தண்டவாள சேதம் உள்ளிட்ட தடைகளை அகற்றி, ரயில் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஹில் குரோவ் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடையாத காரணத்தால், நீலகிரி மலை ரயில் சேவை நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை மேலும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

இதன்படி, மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையேயான பயணிகள் ரயில் மற்றும் உதகமண்டலம் – மேட்டுப்பாளையம் இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் இயங்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.