திருவில்லிபுத்தூரில் நிலாச்சோறு விழா
3 Mar 2026, 3:38 pm
<p><strong>திருவில்லிபுத்தூரில் நிலாச்சோறு விழா</strong></p>
<p>திருவில்லிபுத்தூர், மார்ச் 3- திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் திங்கட் கிழமை இரவு கிளப் மேளா மற்றும் “மண் மணம் மாறாத நிலாச்சோறு” நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் வெங்கடாஜலபதி, முதல்வர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் சிலம்பம், ஜுடோ, கராத்தே, ஸ்கேட் டிங், ஏரோபிக்ஸ், தபேலா மற்றும் மிருதங்கம் உள் ளிட்ட இசைக்கருவி நிகழ்ச்சி கள் மூலம் தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர். மேலும், பாரம்பரிய கலைக ளான பரதநாட்டியம், ஒயி லாட்டம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. நிலவொளியில் பெற் றோர்களுடன் இணைந்து உணவு அருந்திய மாண வர்கள் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் முனி யாண்டி, குணசேகரன், ஆறு முகம், சாத்தப்பன், ரஞ்சித் ஸ்ரீகுமார், சண்முகநாதன் உள்ளிட்டோர், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவர கள் கலந்து கொண்டனர்.</p>
