தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவான நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை நிகராகுவா அதிரடி அறிவிப்பு

yesterday
ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவான நபர்கள்  தேர்தலில் போட்டியிட தடை  நிகராகுவா அதிரடி அறிவிப்பு

ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆதரவான நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை நிகராகுவா அதிரடி அறிவிப்பு

மணாகுவா,ஆக.4-நிகராகுவாவில் அமெரிக்காவின் நேரடி தலையீடு மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளில் ஈடுபட்டவர்களுக்குஅந்நாட்டு தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிகராகுவாவின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் இந்த விவகாரத்தை முற்றிலும்திசைதிருப்பி, அதாவது நிகராகுவாவில் தேர்தல்களே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பொய்யான தகவல்களைப் பரப்பின.

சாண்டினிஸ்டா புரட்சியும் ஒர்டேகாவின் எச்சரிக்கையும்

ஜூலை 19 நிகராகுவா வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். 43 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவுடன் நிகராகுவாவை ஆட்சி செய்து நாட்டை சுரண்டுவதற்கு அனுமதித்த சோமோசாவின் சர்வாதிகார ஆட்சி 1979-ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று தூக்கி எறியப்பட்டது. இது சாண்டினிஸ்டா புரட்சி என அழைக்கப்படுகிறது.

2026 ஜூலை 19 அன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் அந்நாட்டின் ஜனாதிபதியாகவும் உள்ள டேனியல் ஒர்டேகா அந்நாட்டின் அமைதியைக்குலைக்கும் வகையில் 2018-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுநூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் புதிய சட்டத்தை முன்மொழிந்தார்.

இடதுசாரிச் சிந்தனையாளரும் சாண்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணியின் (FSLN) தலைவராகவும் உள்ள அவர் “இனிமேல் அதுபோன்ற தேர்தல்கள் இங்கே நடக்காது. அரசைக் கைப்பற்ற மோசடி செய்யும் முறைகளுக்கு இடமளிக்கப்படாது. நாட்டுக்குத் துரோகம் இழைத்த,சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு எதிராகஅரண் போன்ற சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். அமெரிக்கர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களால் (சதி காரர்களால்) வெற்றி பெற முடியாது!” என்றார்.

அமெரிக்க ஊடகங்களின் பொய் செய்திகள்

டேனியலின் இந்த அறிக்கையை முற்றிலுமாக மாற்றி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது. டேனியல் ஒர்டேகா தேர்தல்களை முழுமையாக ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், அது அவரது “சர்வாதிகாரப் பிடியை” மேலும் அதிகப்படுத்துவதாகவும் கூறியுள்ளது. தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பிபிசிநிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.’ப்ளூம்பெர்க்’ (Bloomberg) வணிக இதழ்,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ கையாள வேண்டிய அடுத்த பிரச்சனையாக நிகராகுவாவின்சர்வாதிகாரம் இருக்க வேண்டும்” என்று கூறி தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிக்காட்டியுள்ளது.

டேனியலின் இந்த அறிவிப்பு குறித்து அவரிடமோ அல்லது நிகராகுவா ஜனாதிபதி அலுவலகத்திடமோ அமெரிக்காவின் பிரதான ஊடகங்களால் கேள்வி எழுப்பி விளக்கம் பெற்றிருக்க முடியும். ஆனால் அதற்கு மாறாக அமெரிக்காவின் நிதி உதவியுடன்செயல்பட்டு வரும்நிகராகுவாவின் வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்களான பெலிக்ஸ் மராடியாகா (Felix Maradiaga) மற்றும் ஜுவான் செபாஸ்டியன் சாமோரோ (JuanSebastián Chamorro) போன்றவர்களின் கருத்துக்களை மட்டுமேமுன்னிறுத்திப் பொய்ப் பிரச்சாரங்களை அந்த அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த மராடியாகா மற்றும் சாமோரோ போன்றவர்கள் தான் அமெரிக்காவின் ‘தேசிய ஜனநாயகஅறக்கட்டளையிடமிருந்து’ (NED) பெருமளவு நிதி பெற்று தமது சொந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயன்ற துரோகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.