முந்தய பக்கம்

‘என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’

19 Nov 2025, 3:33 pm
‘என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்’
<p><strong>&lsquo;என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்&rsquo;</strong></p> <p>புதுதில்லி என்.ஐ.ஏ. வழக்குகளில் 6 மாதத்தில் விசார ணையை முடிக்க வேண்டும் என்றும் இதற்கான சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைக்கவேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. &nbsp;தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீண்ட நாட்கள் ஜாமீன் பெறுவதற்காக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும். என்.ஐ.ஏ., ஆறு மாதங்களில் வழக்கு விசாரணைகளை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து டிசம்பர் 16 ஆம் தேதிக்கு முன்பு ஒன்றிய உள்துறை முடிவு எடுத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அமர்வு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram