மேற்கு வங்கத்தில் வாக்குரிமை பறிப்புக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை என்ஐஏ மூலம் மிரட்டிய மோடி அரசு
19 Jun 2026, 9:00 pm

மேற்கு வங்கத்தில் வாக்குரிமை பறிப்புக்கு எதிராக குரல் கொடுத்தவர்களை என்ஐஏ மூலம் மிரட்டிய மோடி அரசு

கிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய முயன்றதாகக் கூறி, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு ராஞ்சியில் (ஜார்க்கண்ட்) பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் அடிப்படையில் வியாழனன்று அதிகாலை 4.30 முதல் மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது.

அறிஞர்கள்

சோதனைக்குள்ளானவர்களில் ‘பெமி னிஸ்ட்ஸ் இன் ரெசிஸ்டன்ஸ்’ (Femini sts in Resistance) அமைப்பைச் சேர்ந்த அறிஞரும், ஆர்வலருமான ஜீலம் ராய், ‘புரட்சிகர மாணவர் முன்னணி’யின் பொது செயலாளர் ததாகதா ராய் சௌத்ரி மற்றும் ‘சங்கிராமி கிருஷக் மஞ்ச்’ அமைப் பின் ஒருங்கிணைப்பாளரும், அரசுப் பள்ளி ஆசிரியருமான சுகுமார் காயல் ஆகியோர் அடங்குவர். இவர்கள் மூவரும் அடிமட்ட பிரச்சாரங்கள், நில இடப்பெயர்வுக்கு எதிரான இயக்கங்கள் மற்றும் மாணவர் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்கள் ஆவர்.

ஆனால் என்ஐஏ-யின் இந்த சோதனை மாவோயிஸ்ட் இயக்கத்தை பற்றியது அல்ல. ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கை மூலம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்டது ஆகும். சோதனைக்குள்ளா னவர்கள் எஸ்ஐஆருக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்கள்.

எஸ்ஐஆர் - என்ஆர்சி ஆவணம்

சோதனைக்குள்ளானவர்கள் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “பொது வெளியில் கிடைக்கக்கூடிய மற்றும் தடை செய்யப்படாத சட்ட ஆவணங்கள், பத்திரி கைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலக்கியப் புத்தகங்களை அதிகாரிகள் பறி முதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப் பட்ட பொருட்களில் எஸ்ஐஆர் - என் ஆர்சி சிக்கல்கள் தொடர்பான பிரசுரங் களும், தற்போது விசாரணையில் உள்ள அதே வழக்கின் என்ஐஏ குற்றப்பத்திரிகை நகல்களும் அடங்கும்” என அவர்கள் கூறி னர். இந்த சோதனைக்குப் பிறகு, ராஞ்சி யில் உள்ள விசாரணை அதிகாரிகள் முன்னி லையில் ஆஜராகுமாறு ராய் சௌத்ரிக்கு மட்டும் என்ஐஏ சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்ப வர்களிடையே பயத்தை உருவாக்கு வதற்கான ஒரு முயற்சி இது என்று மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ஐஏ சோதனையை வன்மையாகக் கண்டித்துள்ளது.