முந்தய பக்கம்

என்ஐ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து

10 Jul 2026, 9:00 pm
என்ஐ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்  ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து
<p><strong>என்ஐ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 10- கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக் கான வகுப்பு துவக்க விழா வெள்ளியன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. என்.ஐ. பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் (நிர்வாகம்) ஜனார்த்தனன் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில், பத்மநாப புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதலாம் ஆண்டு மாணவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் சிறப்புரையாற்றினார். மேலும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ். பிரபாகர் சிறப்பு ரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர் கள், ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram