தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், என்எச்எம் பணியாளர்கள் கருப்புப்பேட்ஜ் அணிந்து போராட்டம்

29 Nov 2025, 4:58 pm
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், என்எச்எம்  பணியாளர்கள் கருப்புப்பேட்ஜ் அணிந்து போராட்டம்
<p><strong>நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், என்எச்எம் &nbsp;பணியாளர்கள் கருப்புப்பேட்ஜ் அணிந்து போராட்டம்</strong></p> <p>திருப்பூர், நவ.29- மூலனூர் ஒன்றியம், கன்னிவாடி பள்ளி யில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற தேசிய சுகாதாரத் திட்டப் பணியாளர்கள் கருப்புப்பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். தமிழ்நாடு தேசிய சுகாதாரத் திட்டம் (என்எச்எம்) பணியாளர்கள், மாவட்ட நலச் &nbsp;சங்கம் மற்றும் மாவட்ட நல திட்டம் ஆகிய இரண்டு அமைப்புகள் மூலம் பணி நியம னம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர் களுக்கு பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, பண்டிகைக் கால முன்பணம், அகவிலைப் படி, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பு, மாற்றுத் திறனாளி பணி யாளர்களுக்கு மாதாந்திர போக்குவரத்துப் படி, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒரு &nbsp;முறை அடிப்படை ஊதிய உயர்வு உள் ளிட்ட 48 கோரிக்கைகளை தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். எனினும் அரசு நிர்வா கம் இவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கின்றது. எனவே இந்த வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியத்திற் குட்பட்ட கன்னிவாடி அரசுப்பள்ளியில் சனி யன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கருப்புப்பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.