தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி ஆட்சியில் திண்டாடாடும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக உள்ளது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்

31 May 2026, 8:12 pm
மோடி ஆட்சியில் திண்டாடாடும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக உள்ளது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்

மோடி ஆட்சியில் திண்டாடாடும் கர்ப்பிணிகள், குழந்தைகள் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவாக உள்ளது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்

நாட்டில் மூன்றில் ஒரு குழந்தைகள் எடை குறை வாகவே உள்ளன என் பதை மோடி அரசே ஒப்புக்கொண் டுள்ளது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஒன்றிய சுகா தார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தேசிய குடும்ப சுகா தாரக் கணக்கெடுப்பு முடிவு அறிக் கையில்,”நாடு முழுவதும் 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் வீடுகளில் இந்த கணக்கெ டுப்பு மேற்கொள்ளப்பட்டது. இது தாய்மார்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவமனை பிர சவங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரப் பணியாளர்களின் இல்லாமல்

கர்ப்பிணிப் பெண்களில் 95.9 சதவீதம் பேர் பிரசவத்திற்கு முந் தைய பராமரிப்பைப் பெற்றுள்ள னர். இது முந்தைய சுற்றில் 92.6 சதவீதமாக இருந்தது. ஆனால் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிக மான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் முறையான தொடர் பராமரிப்பு இன்னும் கிடைப் பதில்லை.

குறிப்பாக, பத்தில் ஒரு பிரசவம் மருத்துவ வசதிகளுக்கு வெளி யேயே நடக்கிறது. அதேபோல் 8.7 சதவீத பிரசவங்கள் தகுதி வாய்ந்த சுகாதாரப் பணியாளர்களின் இல் லாமல் நடக்கின்றன. பிரசவத் திற்குப் பிந்தைய மிக முக்கியமான முதல் இரண்டு நாட்களுக்குள் கிட் டத்தட்ட 15 சதவீத குழந்தை களுக்கு பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு கிடைப்பதில்லை.

ஊட்டச்சத்து இல்லாமல் 54.9 சதவீத பெண்கள்

தாய்மார்களின் ஊட்டச்சத்தும் கவலைக்குரிய மற்றொரு பகுதி யாக உள்ளது. கர்ப்ப காலத்தில் குறைந்தது 100 நாட்களுக்கு இரும்பு, பாலிக் அமிலம் (Iron, folic acid) மாத்திரைகளை 54.9 சத வீத பெண்கள் மட்டுமே உட்கொண் டனர். மேலும் ஊட்டச்சத்து தொடர் பாக பரிந்துரைக்கப்பட்ட 180 நாட் களை 37.8 சதவீதத்தினர் மட்டுமே பூர்த்தி செய்துள்ளனர்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளிடையே வளர்ச்சிக்குறைவு 35.5 சதவீதத்திலிருந்து 29.3 சதவீத மாகக் குறைந்து, பத்தில் மூன்று குழந்தைகள் என்ற அளவில் மோச மாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த எடையைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் 31.8 சத வீதமாக உள்ளது. அதே நேரத்தில் 5.2 சதவீத குழந்தைகள் இன்னும் கடுமையான சத்துக்குறைவால் உடல் மெலிந்து காணப்படுகின்ற னர்.

தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுக்கும் முறைகளிலும் முன்னேற்றத்திற் கான தேவை உள்ளது. பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பாதியளவு குழந்தைகளுக்கு மட்டுமே தாய்ப் பால் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆறு முதல் எட்டு மாத வயதுடைய குழந்தைகளில் 40.5 சத வீதத்தினருக்கு, பரிந்துரைக்கப் பட்டபடி தாய்ப்பாலுடன் சேர்த்து கூடுதல் உணவுகள் வழங்கப்படு வதில்லை.

தடுப்பூசி - எட்டாத இலக்கு

இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளது. 12-23 மாத வயது டைய குழந்தைகளில் முழுமை யான தடுப்பூசி கவரேஜ் 87.1 சத வீதமாக உயர்ந்துள்ளது. இருப்பி னும், கிட்டத்தட்ட 13 சதவீத குழந்தை களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை. தட் டம்மை தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் கவரேஜ் 71.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதனால் தடுக் கக்கூடிய ஒரு நோய்க்கு எதிராக நான்கில் ஒரு பங்குக்கும் அதிக மான தகுதியுள்ள குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக் காமல் போகிறது.

மருத்துவக் காப்பீடு

நாடு முழுவதும் மருத்துவக் காப்பீடு அல்லது நிதியுதவித் திட் டங்களின் கவரேஜ் 41 சதவீதத்திலி ருந்து 60.2 சதவீத குடும்பங்களாக கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனா லும் கிட்டத்தட்ட பத்தில் நான்கு குடும்பங்கள் மருத்துவக் காப்பீட் டுப் பாதுகாப்பின்றி உள்ளன. இது அவர்களைப் பெரும் மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவக் கடன்களுக்கு ஆளாகும் அபா யத்தில் நிறுத்துகிறது” என அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

மோடி அரசின் கீழ் தாய்மார்கள் ஆரோக்கியம், குழந்தைகளின் ஊட்டச்சத்து, தடுப்பூசி கவரேஜ், நிதியுதவிப் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான அதிகாரம் ஆகிய வற்றில் இடைவெளிகளை மிக மோசமான அளவில் அதிகரித்து வருவதை தேசிய குடும்ப சுகாதா ரக் கணக்கெடுப்பு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகா தார நிபுணர்கள் கூறுகையில், ”இந்தியா ஒருபுறம் ஊட்டச்சத்து குறைபாட்டையும், மறுபுறம் பெரி யவர்களிடையே அதிகரித்து வரும் அதிக எடை மற்றும் உடல் பருமன் அளவையும் எதிர்கொள்ளும் இரட்டைச் சுமையை சந்தித்து வரு கிறது. இந்த மாற்றத்திற்கு தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பு, ஆரோக்கிய மான உணவுகள் மற்றும் நடத்தை மாற்றத் தலையீடுகளில் அதிக கவ னம் செலுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகும்” என எச்சரித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.