காவல் நிலையத்தில் கைதி அடித்துக் கொலை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
27 Sept 2026, 3:12 am

காவல் நிலையத்தில் கைதி அடித்துக் கொலை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், செப். 26-நெய்வேலி நகரக் காவல்நிலை யத்தில் விசாரணைக் கைதி சுப்பிர மணியத்தை அடித்துக் கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிசிஐடி எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ரேவதி (40) என்பவர் சிபிசிஐடி எஸ்பியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் சுப்பிரமணியம் கடந்த 2015 மே 28 அன்று நெய்வேலி நகரக் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடித்துத் துன்புறுத்திக் கொல்லப்பட்டார். சாதிப் பெயரைச் சொல்லி இழிவு படுத்தப்பட்ட இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடலூர் எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றத்தில் (வழக்கு எண்: SC 40/2021) விசாரணை நடைபெற்று வருகிறது.

இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா, காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் மீது துறைரீதியான நட வடிக்கை ஏதுமின்றி தொடர்ந்து சீரு டையில் பணியில் நீடிக்கின்றனர். அரசுத் தரப்பு சாட்சிகளாக உள்ள காவல்துறையினர், சீருடையில் இருக்கும் தங்களது உயர் அதிகாரி களுக்குச் சாதகமாகச் சாட்சியம் அளிக்கும் ஆபத்து நீடிக்கிறது. மேலும், தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளை மாற்றிச் சொல்ல வைக்கின்றனர். ஏற்கனவே காளிகாதேவி, ராஜசேகர், பாலமுருகன் ஆகிய மூவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதர வாக வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லியுள்ளனர்.

4 பிள்ளைகளுடன் கடந்த 11 ஆண்டுகளாக நீதி தேடி அலைகிறேன். எனவே, பொய்ச்சாட்சியம் அளித்த வர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, குற்றவாளிகளான ராஜா உள்ளிட்ட காவலர்களைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

கடந்த 21.09.2026 அன்று கடலூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரஸ்வதி (பொறுப்பு) முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, "குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது இதுவரை ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சாட்சிகளை அச்சுறுத்துவது தொடர்பாக சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினார். இவ்வாறு மனு வில் கூறியுள்ளார்.

இந்த மனுவை, சிபிசிஐடி வடக்கு மண்டலக் காவல் கண்காணிப்பாளர் ஜவஹரிடம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் மேரி ஆகியோர் நேரில் சந்தித்து வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.

4 பிள்ளைகளுடன் கடந்த 11 ஆண்டுகளாக நீதி தேடி அலைகிறேன். குற்றவாளிகளான ராஜா உள்ளிட்ட காவலர்களைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.