விளையாடு
25 Jun 2026, 10:44 pm

உலகக்கோப்பை கால்பந்து 2026

களத்தில் நெய்மர் ; நாக் அவுட் சுற்றில் பிரேசில்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடு களில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங் கள் நடைபெற்று வரும் நிலையில், வியா ழனன்று நடைபெற்ற குரூப் சி பிரிவுக் கான லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பிய னான பிரேசில் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் அமெரிக்கா வின் மியாமி நகரில் நடைபெற்றது. ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலே யே பிரேசில் நாட்டின் விங்கர் வினீ சியஸ் ஜூனியர் கோலடித்தார். இது ஸ்காட்லாந்து தற்காப்பு வீரர் ஸ்காட் மெக்கென்னா பந்தைக் கையாள்வதில் செய்த மோசமான தவறால் அடிக்கப் பட்ட கோலாகும். தொடர்ந்து முதல் பாதி யின் உதிரி நிமிடத்தில் வினீசியஸ் ஜூனி யர் (45+3’) மேலும் ஒரு கோலடித்தார். அதே போல இரண்டாம் பாதியின் 60ஆ வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர்களின் தடுப்பாட்டதை ஏமாற்றி, பிரேசில் வீரர் குன்ஹா கோலடித்தார். நெய்மர் ரிட்டன்ஸ் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான நெய்மர் சுமார் 981 நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரே சில் தேசிய அணிக்காக வியாழனன்று களமிறங்கினார். 60ஆவது நிமிடத்தில் கோலடித்த குன்ஹாவிற்குப் பதிலாக அவர் மாற்று வீரராக 76ஆவது நிமி டத்தில் மைதானத்திற்கு வருகை தந் தார். அப்போது பிரேசில் ரசிகர்களின் ஆரவாரத்தால் மியாமி மைதானமே அதிர்ந்தது. இதன் மூலம் நான்கு உல கக்கோப்பை தொடர்களில் விளை யாடிய 4ஆவது பிரேசில் வீரர் என்ற பெருமையை நெய்மர் பெற்றார். காயம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக பிரேசில் அணிக் காக விளையாடாமல் இருந்த நெய்மர், மீண்டும் களம் திரும்பியதும் மைதானத் தில் உணர்ச்சிவசப்பட்டுக் காணப் பட்டார். நெய்மர் வருகைக்குப் பின், பிரேசில் அணியின் தாக்குதல் ஆட்டம் அனல் பறந்தது. எனினும் ஆட்டநேர முடிவில் அந்த அணி மேற்கொண்டு கோல் எது வும் அடிக்கப்படவில்லை. இறுதியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

மற்ற ஆட்டங்கள் : சுவிஸ் 2-1 கனடா போஸ்னியா 3-1 கத்தார் புதிய வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா

குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற வாழ்வா-சாவா (விளையாட்டு வார்த்தை) ஆட்டத்தில், ஆசியாவின் பலம் வாய்ந்த தென்கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மேலும் உலகக்கோப்பை வரலாற்றிலேயே தென் ஆப்பிரிக்கா முதன்முறையாக நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ நிலைக்கு தகுதி பெற்றுளது. 2010ஆம் ஆண்டு தங்களது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை நடத்தியதற்குப் பிறகு, தற்போது 16 ஆண்டுகள் கழித்து இத்தொடரில் களம் கண்டுள்ள தென் ஆப்பிரிக்கா, முதல் போட்டியில் மெக்சிகோவிடம் 2-0 எனத் தோற்று விமர்சனங்களைச் சந்தித்தது. எனினும், அடுத்த போட்டியில் செக் குடியரசுடன் டிரா செய்து, தற்போது தென்கொரி யாவை வீழ்த்தி மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து : இன்றைய ஆட்டங்கள்

துருக்கி - அமெரிக்கா (குரூப் டி) நேரம் : காலை 7.30 மணி இடம்: லாஸ் ஏஞ்செல்ஸ், அமெரிக்கா

பராகுவே - ஆஸ்திரேலியா (குரூப் டி) நேரம் : காலை 7.30 மணி இடம் : சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

நார்வே - பிரான்ஸ் (குரூப் ஐ) நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : பாஸ்டன், அமெரிக்கா

செனகல் - ஈராக் (குரூப் ஐ) நேரம் : நள்ளிரவு 12.30 மணி இடம் : டொரோண்டோ, கனடா

கேப் வெர்டே - சவூதி அரேபியா (குரூப் ஹெச்) நேரம் : காலை 5.30 மணி இடம் : ஹூஸ்டன், அமெரிக்கா

உருகுவே - ஸ்பெயின் (குரூப் ஹெச்) நேரம் : காலை 5.30 மணி இடம் : குவாடலாஜரா, மெக்சிகோ

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

உஸ்பெகிஸ்தான் வீரர்களை ஏமாற்றிய ரொனால்டோவின் சுயநலம்

கால்பந்து உலகில் ஒருவித சுயநலத்துக்கு பெயர் பெற்றவர் போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால் டோ. இதை அவரது ரசிகர்களே கூறு வார்கள். அந்த சுயநலம் என்ன வென்றால் தான் மட்டுமே கோல டிக்க வேண்டும் என்று ரொனால்டோ விளையாடுவது தான். பந்தை யார் பாஸ் செய்தாலும், தனக்கு பாஸ் செய்ய வேண்டும் என ரொனால்டோ சுயநலமாக இருப்பார். இதனால் கால்பந்து ரசிகர்கள் ரொனால்டோவை ‘செல்பிஷ் ரொனால்டோ’ என்று அழைப்பார்கள். இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ரொனால்டோவின் சுயநலத்தால், அந்த அணி வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளது கால்பந்து உலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு ப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல ரொனால்டோ தான் ப்ரீகிக் வாய்ப்பை உதைப்பார் என கணக்குப் போட்டு உஸ்பெகிஸ்தான் அணி தடுப்பு சுவரை அமைத்தது. ஆனால் ரொனால்டோ உதைப்பது போல நடித்து, தனது சக வீரரை (மெண்டிஸ்) உதைக்க விட்டார். இது பிரம்மாண்ட, தந்திரமான கோலானது. இந்த சம்பவத்தை உஸ்பெகிஸ்தான் மட்டுமின்றி, ஒட்டு மொத்த கால்பந்து உலகமே எதிர்பா ர்க்கவில்லை. அதாவது ரொனால்டோ வின் சுயநலம் உஸ்பெகிஸ்தான் அணியை மட்டுமின்றி கால்பந்து உலகத்தையே உலுக்கியுள்ளது. ரொனால்டோ இப்படியெல்லாம் கோல் வாய்ப்பை விட்டு கொடுக்க மாட்டாரே என்று தான்.

நாக் அவுட்டில் போட்டியை நடத்தும் மெக்சிகோ

குரூப் ஏ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் செக் குடிய ரசை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் போட்டியை நடத்தும் மெக்சிகோ கம்பீரமாக நாக்-அவுட் சுற்றுக்கு முன் னேறியது. அதே சமயத்தில் செக் குடியரசு தொடரிலிருந்துவெளியேறியது. புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, மெக்சிகோ கால்பந்து வரலாற்றில் இரு பெரும் சாதனைகளுடன் மறக்க முடியாத இரவாக அமைந்தது. ஒன்று மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஹாபியர் அகிரே இந்த ஆட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து 17 வயதேயான இளம் நடுகள வீரர் கில்பெர்டோ மோராவை களமிறக்கினார். இதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் கடந்த 24 ஆண்டுகளில் மிகக்குறைந்த வயதில் (17 ஆண்டுகள் மற்றும் 253 நாட்கள்) ஒரு போட்டியைத் தொடக்க வீரராக ஆடிய நபர் என்ற உலக சாதனையை மோரா படைத்தார். மற்றொன்று ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் மெக்சி கோவின் 40 வயது மூத்த கோல்கீப்பர் கில்லெர்மோ ஒச்சோ வா மாற்று வீரராகக் களம் புகுந்தபோது மைதானமே ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது. இதன் மூலம் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்குப் பிறகு தனது 6ஆவது உலகக்கோப்பை தொடரில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஒச்சோவா படைத்தார். மேலும், உலகக் கோப்பையில் விளையாடிய மெக்சிகோவின் மிக வயதான வீரர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது.

அனல் பறந்த மொரோக்கோ - ஹைத்தி ஆட்டம்

குரூப் சி பிரிவுக்கான மற்றொரு லீக் ஆட்டம் அமெரிக்காவின் அட்லா ண்டா மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மொரோக்கோ - ஹைத்தி அணிகள் மோதின. மொரோக் கோ கோல் கீப்பர் யாசின் செய்த தவறால், 10ஆவது நிமிடத்திலேயே ஹைத்தி அணிக்கு கோல் கிடைத்தது. ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் மொரோக்கோ வீரர் ஹக்கிமி கோலடித்தார். அடுத்த 5 நிமிட இடைவெளியில் ஹைத்தி வீரர் வில்சன் பிரம்மாண்ட கோலடித்தார். இது 30 யார்டு தூரத்தில் அடிக்கப்பட்ட அதிரடி கோலாகும். அடுத்த 2 நிமிட இடைவெளியில் மொரோக்கோ வீரர் சைபரி கோலடித்தார். முதல் பாதி யிலேயே 4 கோல்கள் அடிக்கப்பட்டு, ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் 78ஆவது நிமிடத்தில் மொராக்கோவிற்கு கிடைத்த கார்னர் வாய்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி அந்த அணியின் சுபி யான் ரஹீமி ஒரு கிளாசிக் கோல் அடித்து மொராக்கோவை 3-2 என முன்னிலைப் படுத்தினார். தொடர்ந்து 89ஆவது நிமிடத்தில் பந்து கோல் லைனைத் தாண்டி வெளியே சென்றுவிட்டதாக ஹைத்தி தடுப்பாட்ட வீரர்கள் நினைத்து நின்ற போது, மொரோக்கோ வீரர் ரஹீமி துரிதமாக பந்தைக் கடத்திச் சென்று யாசி னுக்குக் கொடுக்க, அவர் கோல் அடித்தார். பந்து முழுமையாக வெளியே செல்லவில்லை என்பது ‘வார்’ பரிசோதனையில் உறுதியானதால், மொராக்கோவின் 4-2 வெற்றி அங்கீகரிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் மொரோக்கோ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.