தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

31 May 2026, 8:41 pm
விளையாட்டு

நெருங்கும் உலகக்கோப்பை கால்பந்து துரத்தும் காயம் : நெய்மர் களமிறங்குவாரா?

கால்பந்து உலகின் நட்சத்திர அணிகளில் ஒன்றான பிரேசில் இதுவரை 5 முறை உலகக்கோப்பையை (1958, 1962, 1970, 1994, 2002) வென்றுள்ளன.

அதிக முறை உலகக்கோப்பை வென்ற நாடு என்ற பெருமை கூட பிரேசில் வசம் தான் உள்ளது. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின் பிரேசில் நாடு கால்பந்து உலகக்கோப்பையை வென்றதில்லை.

23ஆவது சீசன் உலகக்கோப்பை ஜூன் 11ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது.

எனினும் அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்குவது தொடர்பாக இன்னும் உறுதி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கெண்டைக்கால் காயம் காரணமாக பனாமா, எகிப்து அணிகளுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்று பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு வியாழனன்று திடீரென அறிவித்தது.

இது அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குணமடைவார் எனினும் பிரேசில் பயிற்சியாளர் அன்செலோட்டி கூறுகையில்,”நெய்மர் தனது கெண்டைக்கால் காயத்தில் இருந்து குணமடைந்துவிடுவார்” என்று கூறி, ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சாண்டோஸ் கிளப்பிடம் (பிரேசில் கிளப்) இருந்து எங்களுக்கு ஒரு அறிக்கை வந்தது.

அதில் நெய்மருக்கு ஒரு சிறிய பிரச்சனை (வீக்கம்) இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

மே 27ஆம் தேதி வரை அந்தச் சூழ்நிலையைக் கையாளுவதை சாண்டோஸ் கிளப்பிடமே நாங்கள் விட்டுவிட்டோம். ஆனால் பயிற்சியாளர் குழுவின் பார்வையில் நெய்மர் கண்டிப்பாக அணியில் சேர்க்கப்பட வேண்டியவர் என்பதால் அவர் அழைக்கப்பட்டார்.

மே 27-க்குப் பிறகு, நெய்மரின் உடல்நிலையை கவனிக்கும் பொறுப்பை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

நெய்மர் குணமடைவதற்கான பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அவர் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகக் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

தற்போது நெய்மார் நன்றாகப் பயிற்சி செய்து வருகிறார். நல்ல மனநிலையில் இருக்கிறார். உலகக் கோப்பையின் முதல் போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார் என்ற நம்பிக்கையிலும் உள்ளோம்.

ஒருவேளை அவர் முதல் போட்டிக்குத் தயாராகவில்லை என்றாலும், இரண்டாவது போட்டிக்குத் தயாராகிவிடுவார்.

எனவே, அவருக்குப் பதிலாக வேறு யாரையும் அணியில் சேர்க்கும் எண்ணம் எங்களுக்கு முற்றிலும் இல்லை” என்று அவர் உறுதிபட கூறினார்.

நெய்மர் இல்லையென்றால்?

ஒருவேளை காயம் காரணமாக நெய்மர் உலகக்கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்தால் பிரேசில் அணியை இந்த 6 பேர் வழிநடத்துவரகள்.

1. வினிசியஸ் ஜூனியர் (முன்கள வீரர் / விங்கர்)

2. ரோட்ரிகோ (முன்கள வீரர்)

3. அலீசன் பெக்கர் (கோல் கீப்பர்)

4. புருனோ கிமரைஸ் (நடுகள வீரர்)

5. மார்குயின்ஹோஸ் - (தற்காப்பு வீரர்)

6. எண்ட்ரிக் (கோல் கீப்பர் தவிர மற்ற பிரிவுகளில் ஜொலிப்பவர்-வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம்)

நெய்மர் இல்லையென்றால் கால்பந்து உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் வேகமான விங்கர்களில் ஒருவரான வினிசியஸ் ஜூனியர் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.