விழுப்புரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு
5 Jul 2026, 1:40 am
<p><strong>விழுப்புரத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம் எடச்சேரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 'தீக்கதிர்' நாளிதழ் சந்தா சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. வட்டச் செயலாளர் எஸ்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், மாவட்ட குழு உறுப்பினர் எம்.கே.முருகன், வட்ட குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று சந்தாக்களைச் சேகரித்தனர்.</p>
