முந்தய பக்கம்

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

6 May 2026, 8:40 pm
பிறந்த குழந்தைக்கு  இதய அறுவை சிகிச்சை

பிறந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஒரு மருத்துவத் தம்பதிக்கு கர்ப்பகால பரிசோதனையில் குழந்தைக்கு இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இது நுரையீரலில் இருந்து வரும் ஆக்சிஜன் செறிந்த ரத்தத்தை வழக்க மான முறையில் இதயத்துக்கு திருப்பாத ஒரு அரிய வகை பிறவி இதயக்குறை பாடு ஆகும்.

இத்தகைய நிலைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கா விட்டால், அது உடனடி விபரீதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், பிறந்தவுடன் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என்றும், தில்லியில் மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

அதன் பின் தொடர் கண்காணிப்பு க்குப் பிறகு குழந்தை பிறந்தது.

இதய நோயின் பிரச்சனைகள் எழத்துவங்கிய நிலையில் குழந்தைக்கு இதய நிபுணர் குழு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்தனர்.

4 மணிநேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் கள் ஆக்சிஜன் செறிந்த ரத்த ஓட்டத்தை இதயத்தின் இடது பக்கத்துக்கு திருப்பி குழந்தையை காப்பாற்றினர்.

பிறந்த குழந்தைக்கு சவாலான இதய அறுவைச் சிகிச்சையை திறம்படச் செய்த மருத்துவர்கள் குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram