தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நியூயார்க் மேயர் தேர்தல் வெற்றி; அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம்! - சைலஸ் அருள்ராஜ்

10 Nov 2025, 2:46 pm
நியூயார்க் மேயர் தேர்தல் வெற்றி;  அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம்!  - சைலஸ் அருள்ராஜ்

நியூயார்க் மேயர் தேர்தல் வெற்றி;  அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய சகாப்தம்!

சோவியத் சோசலிச குடியரசு 1990 களில் பின்னடைவுக்கு உள்ளானபோது, வரலாறு முடிந்துவிட்டது (End of History) என்று ஒட்டுமொத்த முதலாளித்துவ முகாமும் கூச்சலிட்டது. ஆனால் இன்றைக்கு 33 வருடங்களுக்கு பிறகு அதே முதலாளித்துவ முகாமில் “முடிந்துபோன” வரலாறு மீண்டெழுந்திருக்கின்றது. ஆம்! சோசலிசம் எனும் “பூதம்” அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் கோபுரத்தில் அரியணை ஏறியிருக்கின்றது.

ஜனநாயக சோசலிஸ்ட்வாதியாக தன்னை அறிவித்துக்கொண்ட 34 வயதே ஆன ஜோரன்  மம்தானி நியூயார்க் மாநகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். மம்தானி வென்றது எதிர்க்கட்சி  வேட்பாளர்களை அல்ல. காலம்காலமாக அமெரிக்க  அரசியல்வாதிகளுக்கு நிதியளித்து தங்களது மூலதனத்தையும், லாப வேட்டையையும் பெருக்கிக் கொள்ளும் Doordash, Airbnb, Mike Bloomberg, Wallmart heiress, Alice Walton, Bill Ackman போன்ற பெரும் கார்ப்பரேட் பில்லியனர் கூட்டத்தினை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.

யார் இந்த ஜோரன் மம்தானி?

உகாண்டாவில் பிறந்த இந்திய வம்சாவளியினைச் சார்ந்தவர் ஜோரன் மம்தானி. இவரின் தாய் மீரா நாயர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், தந்தை மக்மூத் மம்தானி குஜராத்தைச் சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் ஆவர். மம்தானிக்கு 7 வயது  இருக்கும்போது நியூயார்க்கில் குடியேறி அமெரிக்க குடியுரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ராப் பாடகராக  வலம் வந்த மம்தானிக்கு அரசியல் பிரவேசம் அவர் வாழ்ந்த பகுதிகளிலிருந்தும், கல்லூரி காலத்திலும்தான் தொடங்கியது.

ஜனநாயகக் கட்சியில் இணைந்து நியூயார்க் நகர மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்த மம்தானி, 2020-ஆம் ஆண்டு  நியூயார்க் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பெர்னி சாண்டர்ஸ், அலெக்சாண்ட்ரியா கார்டெஸ் போன்ற சோசலிஸ்ட் சிந்தனை கொண்டவர்களின் வழி யிலேயே  மம்தானியும் உழைக்கும் மக்களுக்கான தனது அரசியல் பயணத்தை வகுத்திருக்கிறார்.

மேயர் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு உலகம்  முழுவதுமிருந்து  மம்தானியை பலரும் வாழ்த்தி வரும் நிலையில், அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் தலைவர்களான ஒபாமா, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் யாரும் மம்தானியின் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. நியூயார்க் மேயராக ஒரு கம்யூனிச ஆதரவாளரை வெற்றி பெறச்செய்தால் ஃபெடரல் நிதியை நிறுத்திவிடுவேன் என்று டொனால்டு டிரம்ப் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்ட போதும்கூட ஜனநாயகக் கட்சி தலைவர்கள் யாரும் அதுகுறித்து வாய் திறக்கவில்லை.

அமெரிக்காவில் சோசலிசத்துக்கான புதிய பாதை

நியூயார்க் நகர சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே ஜோரன் மம்தானி பிரபலமான அரசியல்வாதியாக அறியப்பட்டி ருந்தார். அதற்கு காரணம் உழைக்கும் மக்களு டனான நெருக்கமும், தொழிற்சங்கங்களின் ஆத ரவும்தான். இதை திரட்டுவதில் மம்தானிக்கு பக்க பலம் சோசலிஸ்ட் ஆதரவாளரான பெர்னி சாண்டர்ஸ்.  சமீபத்தில் சோசலிசக் கொள்கைகள் குறித்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொண்டபோது 60% அமெரிக்க மக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது மம்தானியின் வெற்றியும் விளிம்பு நிலை மக்களுக்கான சோசலிச பாணிக் கொள்கைகளை முன்னெடுப்பதற்கான புதிய பாதைகளை திறந்து விட்டிருக்கிறது.

மம்தானியின் மக்கள் நலத்திட்டங்கள்  '

‘அனைவருக்குமான நியூயார்க்’ என்பதே  மம்தானியின் முக்கிய அரசியல் பிரச்சாரமாக இருந்தது. அவற்றில் பிரதானப் பிரச்சனைகளாக வீட்டு  வாடகை, குழந்தைகள் பராமரிப்பு, பொதுக்கல்வியை வலுப்படுத்துதல், குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கான பணி பாது காப்பு என வகைப்படுத்தியிருந்தனர். வாடகை அதிகரிப்பை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை களை எடுப்பதோடு, புதிதாக அடுக்குமாடி குடி யிருப்புகள் அரசின் சார்பிலே கட்டிக்கொடுக்கப் படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.

குழந்தை பராமரிப்பிற்காக நியூயார்க் நகர மக்கள் ஆண்டுக்கு ஏறத்தாழ 20 பில்லியன் டாலர்  செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதைக் குறைப்பதற்காக 6 வாரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை பராமரிப்ப தற்கான மையங்களை கூடுதலாக ஏற்படுத்த நட வடிக்கை எடுப்பேன் என மம்தானி உறுதியளித்தி ருந்தார். மேலும், ஒரு மணி நேரத்திற்கான குறைந்த பட்ச சம்பளம் 30 டாலராக நிர்ணயிப்பு, டெலிவரி ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக தனி ஆணையம் மற்றும் கிக் பெரு நிறுவனங்களின் வேலைநீக்கத்தில் இருந்து ஊழியர்களை பாது காப்பதற்கான சட்ட விதிகளை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.

செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பு

வாடகை குறைவான வீடுகள், இலவசப் பேருந்து வசதி, அரசின் சார்பில் மளிகைப் பொருட்கள் கடை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் போன்றவற்றிற்கான செலவுகளை ஈடுகட்ட,  நியூயார்க் நகரத்தில் உள்ள பெரும் கார்ப்பரேட்டு களுக்கான செல்வ வரியை 11.5% என்ற அளவிலும்,  1 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும்  நிறுவனங்களுக்கான வரியை 2% அளவிலும் உயர்த்தப்போவதாக மம்தானி அறிவித்திருக்கி ன்றார். இதன் மூலம் நியூயார்க் அரசாங்கம் 10 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற முடியும். இந்த மாற்று வழியிலான நடவடிக்கைகள் அமெரிக்காவில் வரவேற்பைப் பெற்றன.

ஜோரன் மம்தானி, பாலஸ்தீன இனப்படுகொலை க்கு எதிராக குரல் கொடுத்தவர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை போர்க் குற்றவாளிக்கு ஒப்பான வர் என்றும் பேசியவர். ஆனால் அவர் வெனிசுலா, கியூபா போன்ற நாடுகளை அராஜகவாதிகள் என்று  குறிப்பிட்டு அமெரிக்க பாணியிலான தாராள வாத அரசியலின் கருத்துக்களையே பிரதிபலித்திருக் கின்றார் என்ற கோளாறும் உள்ளது.

இந்த மாற்றம் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தும் சோசலிச சித்தாந்தத்திற்கு அமெரிக்காவை திருப்ப உதவுமா? அல்லது, பழைய மரபிலான கீனீசியன் பொருளாதாரத்திற்கே இட்டுச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  கட்டுரையாளர் : இந்திய மாணவர் சங்க திருநெல்வேலி மாவட்ட செயலாளர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.