தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“வீடு நிம்மதியின் இடம்; ஊக வணிகப் பொருள் அல்ல” குடியிருப்போர் உரிமை காக்கும் சட்டத்தில் நியூயார்க் மேயர் மம்தானி கையெழுத்து

11 Nov 2026, 8:52 pm
“வீடு நிம்மதியின் இடம்; ஊக வணிகப் பொருள் அல்ல” குடியிருப்போர் உரிமை காக்கும் சட்டத்தில் நியூயார்க் மேயர் மம்தானி கையெழுத்து

“வீடு நிம்மதியின் இடம்; ஊக வணிகப் பொருள் அல்ல” குடியிருப்போர் உரிமை காக்கும் சட்டத்தில் நியூயார்க் மேயர் மம்தானி கையெழுத்து

நியூயார்க், நவ. 11 – அடுக்குமாடிக் கட்டடங்கள் லாபவெறி கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுத்து, அங்குகுடியிருக்கும் மக்களின் வீட்டு உரிமையைப் பாதுகாக்கும் ‘கொள்முதல் செய்வதற்கான சமூக வாய்ப்புச் சட்டம்’ (Community Opportunity to Purchase Act – COPA) நியூயார்க் நகரில் சட்டமாகியுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக சோசலிஸ்ட்டும், 2026 ஜனவரி முதல் நியூயார்க் நகர மேயராகப் பதவி வகிப்பவருமான ஜோரன் மம்தானி, செவ்வாயன்று (நவ. 10) இச்சட்டத்தில் கையெழுத்திட்டார்.“நமது வீடுகள் நிம்மதியான வாழ்வுக்கான இடங்களாக இருக்க வேண்டும்; ஊக வணிகத்துக்கான கருவிகளாக அல்ல” என்று மம்தானி தெரிவித்துள்ளார்.

வாடகை உயர்வும் வெளியேற்றமும்

அமெரிக்காவில் ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் உரிமையாளர் அதை விற்க முடிவெடுத்தால், அதிக விலை தரும் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கோ பணக்கார முதலீட்டாளர்களுக்கோ விற்பதே வழக்கம். புதிய உரிமையாளர்கள் வாடகையைப் பல மடங்கு உயர்த்துவதும், ஏற்கெனவே குடியிருப்போரை வெளியேற்றுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்தப் பிரச்சினை ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தீவிரமாக உள்ளது. ஊதியத்தின் பெரும்பகுதியை வாடகைக்கே செலவிட வேண்டிய நெருக்கடியில் அங்கும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்த நிலையில் நியூயார்க்கில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி, தகுதியுள்ள கட்டடத்தை விற்க விரும்பும் உரிமையாளர், தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் முன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக நிலஅறக்கட்டளைகள் (Community Land Trusts), லாப நோக்கற்ற வீட்டுவசதி அமைப்புகள் போன்ற தகுதிபெற்ற அமைப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவை கட்டடத்தை வாங்க 145 நாட்கள் பிரத்யேக அவகாசம் வழங்கப்படும்.அவை முன்வைக்கும் விலையை உரிமையாளர் நிராகரித்து, அடுத்த ஓராண்டுக்குள் வேறு ஒருவருக்கு விற்க முயன்றால், அதே விலைக்குக் கட்டடத்தைத் தாங்களே வாங்கிக்கொள்ளும் ‘முதல் மறுப்பு உரிமை’ (Right of First Refusal) இந்த அமைப்புகளுக்கு உண்டு. இதனால், கடைசி நேரத்திலும்கட்டடம் ஊக வணிகர்களின் கைக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவீடுகளைக் கொண்ட, மோசமாகப் பழுதடைந்த அடுக்குமாடிக் கட்டடங்களுக்கும், நகர வீட்டுவசதிப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறையின் (HPD) குறைந்த வாடகை ஒப்பந்தங்களின் கீழ் வரும் கட்டடங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.இவ்வாறு வாங்கப்படும் கட்டடங்களை, அங்கு வசிப்போருடன் இணைந்து சமூக அமைப்புகள் பழுதுபார்த்துப்பராமரிக்கும். இதனால் வாடகை உயர்வு அச்சமின்றி, மக்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான வீட்டு உரிமைகிடைக்கும்.

ஆறு ஆண்டுப் போராட்டத்தின் வெற்றி

ஆறு ஆண்டுகளாக வீட்டுவசதி உரிமை இயக்கங்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவே இச்சட்டம். 2025 டிசம்பரில் நியூயார்க் மாமன்றம் நிறைவேற்றிய இதன் முந்தைய வடிவத்தை, அப்போதைய மேயர் எரிக் ஆடம்ஸ் தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில் ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்தி நிராகரித்தார். பின்னர், 2026 மே மாதம் மம்தானி நிர்வாகம் வெளியிட்ட ‘பிளாக் பை பிளாக்’ (Block by Block) வீட்டு

வசதித் திட்டத்தில் இச்சட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. திருத்தப்பட்ட மசோதா அக்டோபர் 22 அன்று மாமன்றத்தில் 38 – 9 என்ற வாக்குகளில் நிறைவேறியது. தற்போது மேயர் கையெழுத்துடன் சட்டமாகி

யுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.