தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தி ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலை கார்ப்பரேட்டுகளின் திருட்டு முறைக்கு நியூயார்க் நகரில் தடை

13 Nov 2026, 9:37 pm
வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தி ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலை கார்ப்பரேட்டுகளின் திருட்டு முறைக்கு நியூயார்க் நகரில் தடை

வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பயன்படுத்தி ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலை கார்ப்பரேட்டுகளின் திருட்டு முறைக்கு நியூயார்க் நகரில் தடை

நியூயார்க், நவ.13-நுகர்வோரின் தனிப்பட்ட தரவுகள்மற்றும் இணையத் தேடல் விவரங்களைப் பயன்படுத்தி, ஒரே பொருளுக்கு வெவ்வேறு வாடிக்கையாளர் களிடம் வெவ்வேறு விலைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இது அப்பட்டமான திருட்டுத் தனமாகும். இத்தகையவிற்பனை முறைக்கு எதிராக ஜோஹ்ரான் மம்தானி தலைமை யிலான நியூயார்க் நகரசபை தடை விதித்து சட்டம்இயற்றியுள்ளது .

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் அல்காரிதம்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக ஒரு வாடிக்கையாளரின்தனிப்பட்ட தரவுகள், இருப்பிடம், இணையத்தில் அவர் தேடும் விவரங்கள், செல்போன் பேட்டரி அளவு உட்பட அனைத்தையும் ஆய்வு செய்து அவருக்கேற்றவாறு விலையை மாற்றி அமைக்கும் ‘கண்காணிப்பு விலை நிர்ணய’ முறையை பின்பற்று கின்றன. இதன் மூலமாக ஒரு பொருளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விலை வைத்து கூடுதல் லாபத்தை பெற்றும் பெரும் கொள்ளையில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் இம்முறைக்கு எதிராக நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆதரவுடன் நகர சபை உறுப்பினர் ஜூலி மெனின்கொண்டு வந்த மசோதாவிற்கு நகர சபை நவ.12 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டம், அமெரிக்காவிலேயே மிகக் கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கண்காணிப்பு விலை நிர்ணய முறை குறித்து நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருந்தன; ஒரு பிரபல மளிகைப் பொருள் விநியோகதளம் ஒன்றில், ஒரே பொருளுக்கு நபருக்கு நபர் 23 சதவீதம் வரை அதிக விலை வித்தியாசம் காட்டப் பட்டுள்ளது. மற்றொரு சில்லறை விற்பனைக் கடையின் இணையத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு 499.99 டாலராக கட்டப்பட்ட தொலைக் காட்சிப் பெட்டியின் விலை அவர்அந்தக் கடையின் வாகன நிறுத்து மிடத்திற்குள் நுழைந்தவுடன், திடீரென599.99 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல வாடிக்கையாளரின் செல்போனில் பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும்போது, வேறு வழியின்றி அதிககட்டணத்தை ஏற்றுக்கொள்வார் என்பதைக் கணித்து, பிரபல வாடகை கார் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்துவதும் அம்பலமாகியுள்ளது.

“நுகர்வோரை ஏமாற்றும் இந்த மறைமுக விலை நிர்ணய முறையை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் நியூயார்க் நகர சபை மக்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. ஒரே பொருளுக்கு ஆளுக்கு ஆள் வெவ்வேறு விலை வசூலிப்பது நெறியற்றது மற்றும் இது விலைவாசி உயர்வை மேலும் மோசமாக்கும் செயல். இத்தகைய கார்ப்பரேட் சுரண்டல்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்துப் பேசிய ஜூலி மெனின் தெரிவித்தார்.

மேலும் நியூயார்க் அந்நகர சபையில் ராணுவப் பணியின் போது 100 சதவீதம் நிரந்தர ஊனமடைந்த முன்னாள் ராணுவ வீரர்களின் வீடுகளுக்குச் சொத்து வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,500 குடும்பங்கள் பயனடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.