அரியலூரில் ரூ.11.19 கோடியில் புதிய பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
12 Dec 2025, 2:40 pm
<p><strong>அரியலூரில் ரூ.11.19 கோடியில் புதிய பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>அரியலூர், டிச.12- அரியலூரில் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம், சாலை பணிகள் என ரூ.11 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அரியலூர் நகராட்சிக்குட்பட்ட தினசரி காந்தி மார்க்கெட்டில் சேதமடைந்திருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, தினசரி காந்தி மார்க்கெட்டிற்கு ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், கட்டிடம் கட்டுவதற்கான கட்டிட வரைபடங்களை ஆய்வு செய்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனையடுத்து, அரியலூரில் இருந்து கோவிந்தபுரம் வரையிலான இடைவெளி தடத்திலிருந்து இருவழிச்சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மற்றும் அரியலூரில் இருந்து பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் அயனாத்தூர் வரையில் உள்ள இடைவெளி தடத்திலிருந்து இருவழிச் சாலையாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் என மொத்தம் ரூ.11 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் லாரி இயக்கி வைத்தல், உடையார்பாளையம், உஞ்சினி, செந்துறை, நக்கம்பாடி, குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களில் சாலைகள் மேம்படுத்துதல், பாலம் கட்டுதல் என ரூ.25.63 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அந்தந்த பகுதிகளில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “நெடுஞ்சாலைத் துறை மூலம் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தளவாய் பகுதியில் கடந்த வெள்ளத்தின்போது, வெள்ள நீர் வடியாமல் இரண்டு கிராமங்கள் மூழ்குகின்ற நிலையில் இருந்த இடத்தில், சாலையை வெட்டி, அந்த நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த இடத்தில் இன்றைக்கு ஒரு புதிய பாலம் அமைக்கப்படுகிறது’’ என்றார்.</p>
