தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ. 21.02 கோடியில் புதிய மகளிர் விடுதிகள் மதுரை, தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டையில் திறப்பு

17 Feb 2026, 3:36 pm
ரூ. 21.02 கோடியில் புதிய மகளிர் விடுதிகள் மதுரை, தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டையில் திறப்பு
<p><strong>ரூ. 21.02 கோடியில் புதிய மகளிர் விடுதிகள் மதுரை, தருமபுரி, கடலூர், ராணிப்பேட்டையில் திறப்பு</strong></p> <p>சென்னை, பிப். 17 - பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி, பயிற்சி தேவைகளுக்காக நகரங்களுக்கு வரும் அனைத்து பெண்களுக்கும் பாது காப்பான தங்குமிடம் வழங்கும் நோக்கில், &nbsp;மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய நான்கு இடங்களில் ரூ. 21.02 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மகளிர் &nbsp;விடுதிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். &nbsp;இந்த நான்கு விடுதிகளிலும் 200 மகளிர் &nbsp;தங்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் &nbsp;உரிமைத்துறையின் கீழ் செயல்படும் &nbsp;தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் &nbsp;நிறுவனம் ஏற்கனவே 15 மாவட்டங்களில் 19 தோழி விடுதிகளை நடத்தி வருகிறது. &nbsp;இவற்றில் 1,900 பணிபுரியும் மகளிர் பயன்பெறு கின்றனர். இதோடு, 26 புதிய விடுதிகள் ரூ.239.15 கோடி மதிப்பீட்டில் 2,740 மகளிர் பயன் பெறும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பயோமெட்ரிக் நுழைவு, 24 மணி நேர பாதுகாப்பு, வை-பை &nbsp;(Wi-Fi), (CCTV), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், &nbsp;சுடுநீர், சலவை இயந்திரம், பகல்நேர குழந்தைகள் பராமரிப்பு, பொழுதுபோக்கு அறை உட்பட அனைத்து நவீன வசதிகளும் &nbsp;குறைந்த வாடகையில் வழங்கப்படுவது குறிப் பிடத்தக்கது. &nbsp;நிகழ்வில் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமை செயலாளர் நா. முருகானந்தம் உட்பட &nbsp;மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.