தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய பல்கலைக்கழகம்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி

6 Apr 2026, 5:37 pm
பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய பல்கலைக்கழகம்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி
<p><strong>பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய பல்கலைக்கழகம்! திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி</strong></p> <p>தருமபுரி, ஏப்.6- பாப்பிரெட்டிப்பட்டியில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என திமுக வேட்பா ளர் பி.பழனியப்பன் வாக் குறுதியளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப் பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடத்தூர் &nbsp;மின்வாரிய அலுவலகம் அருகே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அமைக் கப்பட்ட தேர்தல் பணிமனையை, திமுக வேட் பாளர் முனைவர் பி.பழனியப்பன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, சக்தி மஹாலில் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.பழனியப்பன் பேசுகை யில், செட்டிக்கரையில் அரசு பொறியியல் கல் லூரி, கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல் லூரி கொண்டு வந்தது நான்தான். அரூர், பாப் பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் அரசு &nbsp;கலைக்கல்லூரி என் முயற்சியால் கொண்டு &nbsp;வரப்பட்டது. அதேபோல், பாப்பிரெட்டிப் பட்டியில் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் &nbsp;ஒரு பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை &nbsp;எடுக்கப்படும், என்றார். &nbsp;இக்கூட்டத்தில் திமுக தொகுதி பொறுப் பாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், விசிக கருத்தி யல் பரப்பு மாநிலச் செயலாளர் பொ.மு. நந்தன், மாவட்டச் செயலாளர் சென்ன கிருஷ்ணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், சிபிஎம் வட்டச் செயலா ளர் தி.வ.தனுசன், மனிதநேய மக்கள் கட்சி &nbsp;மாவட்டத் தலைவர் என்.சுபேதார், திமுக &nbsp;ஒன்றியச் செயலாளர்கள் பி.எஸ்.சரவணன், &nbsp;பிரபு ராஜசேகர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.