தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

20 Jun 2026, 8:54 pm
அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

அறிவியல் கதிர் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பூச்சி

அற்புதமான ஒரு புதிய ஒட்டும் தன்மையு டைய பூச்சியைக் கண்டுபிடித்துள்ளதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். “இந்த கண்டுபிடிப்பு ஏன் மிக முக்கி யமானது? இவை இருக்குமிடத்தை அறி வது மிகக் கடினம்.

என்றாலும் நம் சூழல் மண்டலத்திற்கு முக்கிய பணியாற்றும் உயிரினங்கள் பற்றி நாம் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்ப தை இது உணர்த்துகிறது” என்று இது குறித்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரி யரும் மிக் ஷிகன் பல்கலைக்கழகத்தின் ஆட் ஜங்க் (adjunct) புலத்தின் பூச்சியி யல் துறைப் பேராசிரியருமான க்வென் பியர்சன் (Gwen Pearson) கூறுகிறார்.

வேடம் போட்டு எதிரியிடம் இருந்து தப்பிக்கும் தந்திரம் இப்பூச்சியின் நீளம் 41 செண்டி மீட்டர். எடை 44 கிராம். இவ்வகை பூச்சி கள் இலைகள், கிளைகள், பாசிகளில் அமர்ந்து இரை பிடி உயிரினங்களிடம் இருந்து தப்ப ஒரு நூறாண்டிற்கும் மேலாக தங்கள் வேடமணிதல் திறனில் துல்லியமான பயிற்சியை பெற்றுள்ளன.

மிகச் சிறந்த பார்வைத் திறன் பெற்ற மனிதர்களாலும் கூட இவை இருக்கும் இடத்தைக் கண்ட றிவது மிகக் கடினம். ஒரு குச்சிப் பூச்சி யை நாம் தொந்தரவு செய்தால் உடனே அது கீழே விழுந்து ஆடாமல் அசையா மல் அப்படியே கிடக்கும். அதனால் இது போல விழுந்து கிடக் கும் இவ்வகை பூச்சிகளிளை தேட வேண்டும்.

அக்ரஃபில்ல ஆல்ட்டா (Acrophylla alta) என்ற இந்த புதிய வகை பூச்சியினத்தின் ஒரு புகைப்படம் ஐ நேச்சரலிஸ்ட் (iNaturalist) என்ற அறிவியல் செய்திகள் பகிரப்படும் தளத்தில் பார்த்தவுடன் விஞ்ஞானிகள் வியப்படைந்தனர்.

பல இரவுகள் தலை யில் அணியும் மற்றும் ஃப்ளாஷ் விளக்கு களுடன் ஒரு மழைக் காட்டில் பயணம் செய்து இந்த அரிய புதிய விலங்கைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் தேடத் தொடங்கினர். 30 மீட்டர் உயரமான ஒரு மரக் கவிகையின் மேல் பகுதியில் இந்த நீண்ட பூச்சியைக் கண்டுபிடித்தனர்.

ஃபாஷ்மிட்ஸ் (Phasmids) என்று அழைக்கப்படும் குச்சிப் பூச்சிகள், இலைப் பூச்சிகள் போன்ற பூச்சிகள் அடங்கிய பெரிய உயிரினக் குடும்ப பூச்சிகள் இயற்கைத் தேர்வின் மகத் தான எடுத்துக்காட்டுகள். தேடலின்போது தாவர உண்ணி கள் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருந்தன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வேறு பல விலங்கு களுக்கு குச்சிப் பூச்சிகள் சுவையான உணவு.

மூவாயிரத்து ஐநூறுக்கும் கூடுத லாக விவரிக்கப்பட்டஇவ்வகை பூச்சி கள் இரை பிடி உயிரினங்களிடம் இருந்து தப்ப மேற்கொள்ளும் வேட மணிதல் தந்திரங்கள் திடுக்கிடவைப் பது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வழக்கமாக குச்சிகள், பட்டைகள், இலைகளில் இவை தங்களுக்கு சம்பந்தமில்லாத பொருட்கள் போல தோற்றமளிக்கின்றன.

திறந்தவெளி இடங்களில் இவை ஒளிந்துகொள்ள தோலுடன் உள்ள குழல்கள், வெந்நிற, தட்டையான இலைகள் போல அழ கான, பல அற்புத வடிவங்களில் காட்சி தருகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குச்சிப் பூச்சிகள் மகிழ்ச்சி தரும் அகண்ட பிரிக்லி குச்சிப் பூச்சிகள் (broad prickly sticks), விங் பார்க் ஹக்ஃகர்ஸ் (winged bark huggers), ஸ்டவுட் க்ரோலர்கள் (stout crawl ers), குறுகிய இலை மிமிக்ஸ் (narrow leaf mimics) மற்றும் மர லாஃப்ஸ்ட் டர்கள் (tree lobsters) என்று பல்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள் ளன.

இவற்றில் மர லாஃப்ஸ்ட்டர்கள் கனமான கவசமணிந்த டேங்குகள் போல தோற்றமளிப்பவை. இன்னும் கண்டறியப்படாமல் இருக்கும் உயிரினங்கள் “குச்சி மற்றும் இலைப் பூச்சிகள் (முன்பு நுண் உயிரினங்களுக்கான விலங்குகாட்சி சாலையில் சேகரித் தவர் என்ற நிலையில் இவை) எளிதில் புலப்படாதவை. ஒரு கூண்டில் பத்து பூச்சிகளை வைத்திருந்தாலும் ஒன்பது மற்றும் பத்தாவது பூச்சியை ஒவ்வொரு கிளையிலும் இலையிலும் அதிக மனித முயற்சியுடன் தேடவேண்டும்.

இதனால் இவை இதுவரை கண்டுபிடிக்கப் படாமல் இருந்ததில் வியப்பில்லை. இதுவரை சுமார் ஒரு மில்லியன் பூச்சிக ளை மட்டுமே விஞ்ஞானிகள் அடையா ளம் கண்டுபிடித்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் ஆயிரக் கணக்கான புதிய இனங்கள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகின்றன. கண்டு பிடிக்கப்படுபவற்றில் புதிய இனங்கள் ஏன் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.

இதுவரை ஐந்து மில்லியன் உயிரினங் கள் பூமியில் வாழ்கின்றன. இதில்இது வரை நமக்குத் தெரிந்த அணைத்து வித மான விலங்கினங்களில் ஆத்ரோ பாட்ஸ் (arthropods) எனப்படும் கணுக் காலிகள் உள்ளிட்ட பூச்சிகள் மற்றும் அவற்றின் உறவினர்களின் எண்ணிக் கை 85%. எல்லா பாலூட்டிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை லேடிஃபேர்ட்ஸ் (ladybirds) எனப்படும் கரும் புள்ளி கள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டி னத்தின் எண்ணிக்கைக்கு சமமானது.

எந்த அளவிற்கு அச்சுறுத்தலுக்கு உயிரி னங்கள் உள்ளாகியுள்ளன என்பதற்கு பன்னாட்டு சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்பு பட்டியல் ஒரு நல்ல குறியீட்டு அடை யாளம். இதுவே விலங்கினங்களின் நிலை பற்றிய முதண்மையான தகவல் தளம். ஆனால் இதில் தெரிந்த உயிரினங் களில் 1.3% உயிரினங்கள் பற்றிய தரவு கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. மி

க அதிக எண்ணிக்கையில் பூமியில் உள்ள பூச்சி இனங்களில் அச்சுறுத்தப் படும் இனங்களின் சதவிகிதத்தை சரி யாக மதிப்பிட போதுமான தரவுகள் கிடைக்கவில்லை என்று ஐ யு சி என் கூறுகிறது. பெயரிடுதல், பாதுகாத்தல் இரண்டும் உயிர்ப் பன்முகத் தன்மை யை புரிந்துகொள்ள உதவும் முதல் நிலை. பெரும்பாலான உயிரினங்கள் எங்கு வாழ்கின்றன, அவை எதை உண்கின்றன, அவற்றின் வாழ்க்கை முறை பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

ஐயுசிஎன்னின் பட்டியலிடப்பட்டுள்ள தரவு தளத்தில் 26% உயிரினங்கள் குறித்த போதிய தகவல்கள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லிட்டில் ஹெர்ஃப் வில்லோ தேனீ (little willow herb leafcutter) என்ற உயிரினம் யு கேயில் அழிந்துவிட்டது. இதைத் தவிர இது பற்றி சொல்ல விஞ்ஞானிகளிடம் எந்த ஒரு தகவலும் இல்லை.

சிறிய உயிரினங்களின் முக்கியத்துவம் பெரிய கவர்ச்சிகரமான விலங்கு களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப் பதால் உலகை இயங்கவைக்கும், சூழல் சேவைகளை வழங்கும் சிறிய விலங்குகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். சிறிய, முதுகெலும் பற்ற, தாவரங்களில் மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்கள், பறவைகள் மற் றும் பிற விலங்குகள் மண்ணை ஆரோக் கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

பெரிய உயிரினங்களை விட அவற் றின் உறவினர்களான இந்த சிறு உயிரின ங்கள் பற்றி அதிகம் ஆராயப்பட வேண்டும். அச்சுறுத்தலுக்கு ஆளாகும் விலங் குகளில் பெரியவை சிறியவை என்று வேறுபாடு இல்லை.

அவற்றிற்கு ஏற்பட் டுள்ள பொதுவான அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்தப்படவேண்டும். இது ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்த கொள்கைகளை வகுக்க நமக்கு உதவும்” என்று பியர்ஸன் கூறுகிறார். இந்த புதிய உயிரினத்தின் கண்டு பிடிப்பு விஞ்ஞானிகளிடம் மேலும் பல உயிரினங்களை கண்டறியும் ஆர்வ த்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் வியப்பில்லை அல்லவா!

வானத்தில் இருந்து வந்து விழுந்த அன்பளிப்பு

எரிமலையில் இருந்து வந்து விழும் சாம்பல் பல ஆண்டுகளுக்கு ஒரு தொல்லையாகக் கருதப்பட்டது. ஆனால் சிசிலியாவின் ஒரு திட்டம் வேளாண்மையில் அதன் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

கட்டேனியா (Catania) என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் எட்னா (Etna) எரிமலையை நோக்கி அமைந்திருக்கும் ஜைர (Giarre) என்ற ஊரில் வாழும் ஆண்டிரியா பாஸ னிஸி (Andrea Passanisi) என்ற வெப்ப மண்டல, சிட்ரஸ், வெண்ணைப் பழஉற்பத்தியாளர் தனது 100 ஹெக் டேர்/247 ஏக்கர் நிலத்தில் எரிமலை சாம் பல் என்ற ஒரு அசாதாரண உரத்தைப் பயன்படுத்துகிறார்.

தலைமுறை தலைமுறையாக இருந்த தொல்லை

ஐரோப்பாவின் மிக உயரமான, மிகத் தீவிரமான எரிமலையின் சரிவுப் பகுதிகளில் அமைந்திருக்கும் பல கிரா மங்களில் வாழும்நூற்றுக் கணக்கான விவசாயிகள், குடிமக்கள் போல 41 வயது பாஸனிஸிக்கும் அவரது குடும் பத்தினருக்கும் எரிமலைச் சாம்பலின் தொல்லையை பல தலைமுறைகளாக சமாளிக்க வேண்டியிருந்தது. என்றா லும் சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் எரிமலையில் இருந்து வந்த சாம்பல் மிதமிஞ்சிய அளவில் இருந்தது. அத னால் ஒரு மாற்று அணுகுமுறை தேவைப்பட்டது. ஒவ்வொரு முறை எரிமலை வெடிக்கும்போதும் ஜைர போன்ற சிறிய நகரங்களின் மீது சராசரியாக 12,000 டன் சாம்பல் வந்துவிழுந்தது. வீசியடிக்கும் காற்று இந்த சாம்பலை 800 கிலோமீட்டர் தூரத்திற்கு எடுத்துச்சென்றது. ஜூலை 2024ல் எட்னாவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சிசிலியின் இரண் டாவது மிகப் பெரிய நகரமான கட்டேனி யாவில் தினமும் 17,000 டன் எரிமலை சாம்பல் வந்து விழுந்தது. இதை சேகரித்து அகற்ற சுமார் பத்து வாரங் களாயின. பாஸனிஸி போன்ற விவசாயிகள் இந்த எரிமலை சாம்பலை பயிர்களுக்கு ஒரு ஆபத்து. பாசன நீரை மாசுப டுத்தும் பொருள். இதை நீக்க சிறப்பு இயந்திரங்கள் தேவை.

சுத்தப்படுத்த பல நாள் வேலை செய்யவேண்டிய நிலை என்று பல ஆண்டுகளாகக் கருதி வந்தனர். ஆனால் கட்டேனியா பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு திட்டம் இந்த சாம்பலை வேளாண் மை உட்பட பல்வேறு துறைகளில் பல பொருட்களின் உற்பத்தியில் ஒரு முக் கிய மூலப்பொருளாக பயன்படுத் தலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத் தியது. “இதனால் சில வேதி உரங்களை பயன்படுத்தினால் மட்டும் போதும் என்ப தால் உரங்களின் விலை குறைகிறது.

நீடித்த நிலையான வளர்ச்சி ஏற்படுகி றது. தவறாகப் பயன்படுத்தாமல் இயற் கையின் சமநிலையை மதிக்க இது ஒரு நல்ல வழி. இதுவே இப்போது எங் கள் வேளாண்மையின் எதிர்காலம்” என்று பாஸனிஸி கூறுகிறார்.

“2011க்குப் பிறகு வெளிவரும் சாம்பலின் அளவு தீவிரமானது. இதற் குப் பிறகு இப்பிரச்சனைக்கு ஒரு முறை யான தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகியது” என்று சாம்பல் கழிவை மேலாண்மை செய்வது குறித்த முதல் ஆய்வின் விஞ்ஞானி மற்றும் முன்னணி ஆசிரியரும் சூழல் பொறியி யல் பேராசிரியருமான பவ்லோ ரெகா ரோ (Paolo Roccaro) கூறுகிறார்.

எரிமலை சாம்பலின் மகத்தான பயன்கள்

எட்னா சாம்பலின் வேதிப்பண்புகள் ஆராயப்பட்டு சாலை கட்டுமானம், தூய்மைப்படுத்துதலில் சுவர் நிர்மா னம், முப்பரிமான அச்சுப்பொரிகளில் பயன்படும் மை போன்ற பல்வேறு துறை களில் முக்கிய மூலப்பொருளாக பயன் படுத்த முடியும்.

இந்த சாம்பல் பார்ஸ னிஸி மற்றும் எரிமலையில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லிங்கு வக்ளோஸா (Linguaglossa) என்ற இடத்தில் திராட்சைத் தோட்டம் வைத்தி ருக்கும் எமிலியோ ஸயக்க (Emilio Sciacca) போன்றோருக்கு பயனுள்ள தாக உள்ளது. “எட்னாவின் எரிமலை சாம்பல் கலந்த மண்ணிற்கு கூடுதல் மதிப்பு உள்ளது. இது வானத்தில் இருந்து எங்க ளுக்காக வந்து விழும் அன்பளிப்பு.

சேகரித்து அகற்றுவதற்குப் பதில் சாம்பலை நிலத்திலேயே விட்டுவிட் டால் மண் அதை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. இதில் இரும்பு, அலுமி னியம் மற்றும் சிலிகா இருப்பதால் மண் ணிற்கு கூடுதல் வளத்தைத் தருகிறது. இந்த தனித்துவமான நிலவியல் அமைப் பில் மண்ணின் எரிமலை இயல்பை நம்மால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. மகத்தான இதன் நுணுக்கங்க ளுடன் நாம் இதை ஏற்றுக்கொள்ளப் பழகவேண்டும். இதை நம் வலிமையாக ஆக்கிக்கொள்ளவேண்டும்” என்று எமிலியோ கூறுகிறார்.

“இந்த சாம்பலை அதிகாரப்பூர்வமாக வணிக நோக்கங் களுக்காகப் பயன்படுத்துவதற்கு இன்னமும் தடைகள் உள்ளன. நகர்ப் புறப் பகுதியில் இருந்து வரும் எரிமலை சாம்பல் உட்பட அணைத்து விதமான கழிவுகளும் முனிசிபல் அளவிலேயே மேலாண்மை செய்யப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் கூறுகிறது. இதை அங்கீகரிக்கப்பட்ட நிலக் குழிகளில் கொட்டி அப்புறப்படுத்த அதிக செலவாகிறது. வணிக நோக்கங் களுக்கு இது பயன்படுத்தப்பட்டால் இந்த செலவு குறையும்.

இந்த சாம் பலை மறுசுழற்சி செய்ய பிராந்திய ரீதியி லான வழிகாட்டு நெறிமுறைகள் நடை முறைக்கு வந்து ஓராண்டாகியும் இதுவரை எந்த தொழில் முனைவோர் நிறுவனமும் இதை மறுசுழற்சி செய்ய முன்வரவில்லை. இந்த ஆய்வில் கூறப் பட்டுள்ள மாற்று அணுகுமுறை வருங் காலத்தில் வேலை செய்யும் என்று எடுத்துக்காட்டுவதே இந்த ஆய்வின் நோக்கம்” என்று ரெகாரோ கூறுகிறார். ஐரோப்பாவின் மற்றொரு பகுதி யில் சாம்பலின் பயன்கள் இன்னொரு விவசாயக் குழுவினரால் கண்டுபிடிக் கப்பட்டுள்லது.

2010ல் ஐச்லாந்து எய் யஃப்லாட்டியயூக்குட் (Eyjafjall ajökull) என்ற எரிமலை வெடித்து சர்வ தேச அளவில் இடையூறுகளை ஏற்படுத் தியது. அப்போது விவசாயிகள் கால் நடைகளைப் பாதுகாக்க சிரமப்பட் டனர். ஐஸ்லாந்தின் பெரும் பகுதி விவசாயமும் கால்நடைகளையே சார்ந் துள்ளது. ஆனால் விழும் சாம்பலில் கலந்துள்ள ஃப்ளூரைடு தூள் நஞ்சால் கால்நடைகள் பாதிக்கப்பட்டன.

எங்கள் கலாச்சாரத்தின் அடையாளம்

ஆனால் ஐஜஃப்யல் (Eyjafjöll) என்ற இடத்தில் வாழும் தெராரி நோலஃப்ஸன் (Thórarinn Ólafsson) போன்றோரின் கோதுமைப் பயிர் நீண்ட காலம் உயர் தரத்துடன் உள்ளது. வழக் கமாக மூன்றாவது ஆண்டில் பயிர் பல வீனமாக இருக்கும். ஆனால் சாம்பல் கலந்த மண்ணில் வளர்வதால் இது முதல் ஆண்டுப் பயிர் போல செழுமை யாக காணப்படுகிறது. மற்றவர்கள் சாம் பலை வேறு வழிகளில் பயன்படுத்து கின்றனர். “இந்த சாம்பல்எங்கள் பெரு மை மிக்க பாரம்பரியத்தின் அடை யாளம். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு அம்சம். காற்று இதை அடித்துச்செல்வ தற்குப் பதில் சாம்பலை நாங்கள் உற் பத்தி செய்யும் பொருட்களில் உபயோ கிக்க முயற்சி செய்கிறோம்” என்று அதைப் பயன்படுத்தி பீங்கான் கலைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கஃப் யாக் கரடாட்டியா (Guðbjörg Káradó ttir) கூறுகிறார். “

எல்லாவற்றையும் சுமையாக நினைப்பதை விட ஒவ்வொரு சிறிய குப் பைப் பொருளில் இருந்தும் சிறந்த வற்றை உருவாக்கவேண்டும். இந்த சாம்பல் ஒரு வஞ்சக விருந்தாளியாக வருகிறது. உண்மைதான். என்றாலும் சண்டை போடுவதை விட அதனுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும்.

அவ்வாறு செய்தால் அதை ஒரு கூட்டாளியாக்கிக்கொள்ளலாம்” என்று சிசிலி எட்னா எரிமலையால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒண்றான ரிபாஸ்ட்டோவில் (Riposto) சாம்ப லில் இருந்து சிறிய நினைவுப் பொருட் களைத் தயாரிக்கும் 42 வயதான கலை ஞர் நில செரா டெர்ஸோ (Nilla Zaira D’Urso) கூறுகிறார். எரிமலை சாம்ப லையும் பயனுள்ள விதத்தில் உரமாக் கும் இந்த மனிதர்கள் உலகிற்கே ஒரு சிறந்த முன்மாதிரி!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.