தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் துறைமுகம்-தமிழக அரசு நடவடிக்கை

31 Jan 2026, 5:27 pm
தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்  துறைமுகம்-தமிழக அரசு நடவடிக்கை
<p><strong>தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் &nbsp;துறைமுகம்-தமிழக அரசு நடவடிக்கை</strong></p> <p>தூத்துக்குடி,ஜன.30- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில் &nbsp;புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க &nbsp;அரசு எடுத்துள்ள நட வடிக்கை என்பது &ldquo;இந்தியாவின் கடல்சார் கனவுகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய மைல்கல்&rdquo;என்று துறைமுகத் தலைவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக கப்பல் கட்டுமான நிறுவனம் ஒன்று தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமைக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நாட்டின் 12 முன்னனி துறைமுகங் களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் மற்றும் நாட்டின் மூன்றா வது பெரிய கொள்கலன் துறைமுக &nbsp;மாக வ.உ.சி. துறைமுகம் விளங்குகிறது. இது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு சேவை களைக் கொண்டுள்ளது. 1974 ஆம் &nbsp;ஆண்டு முதல் செயல்பட்டு வரும் வ.உ.சி. துறைமுகம் முற்றிலும் உள்நாட்டு முயற்சியில் அமைக்கப் பட்ட செயற்கை துறைமுகமாகும். நாட்டில் கொல்கத்தா, கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களில் 30 கப்பல் கட்டுமான நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வணிகம் மற்றும் கப்பல்படைக்கு தேவையான கப்பல் கள் கட்டப்பட்டு வருகிறது. சென்னை யில் லார்சன் மற்றும் டுப்ரோ (எல் அன்ட் டி) என்ற தனியார் நிறுவனம் சார்பில் எண்ணூர் அருகே காட்டுப் பள்ளியில் கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக் குடியில் புதிதாக கப்பல் கட்டும் நிறு வனத்தை அமைக்க ஒன்றிய &nbsp;அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து வ.உ.சி. துறைமுகம் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தலா 50 சதவீத பங்கு களுடன் இணைந்து கூட்டு நிறுவன மாக இது உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கப்பல்கட்டுதளம் மற்றும் கனரக தொழிற்சாலை என்ற பெய ரில் சிறப்பு நோக்க நிறுவனமாக பதி விடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு சூழலை வலுப் படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாட்டின் கடல் சார் அடித்தள வசதிகளை ஆழப்படுத்தவும் ஒன்றிய அரசு ஆதரவுடன் செயல்படுத்த இந்த முயற்சி துணைபுரியும் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத்தின் ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோகித், &ldquo;இந்த கூட்டு முயற்சி, வ.உ.சி. துறைமுகத்துக்கும் இந்தியாவின் கடல்சார் கனவுகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய மைல்கல்லாகும்&rdquo; என்று தெரிவித்தார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.