தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய இருக்கைகள்

7 Dec 2025, 3:52 pm
பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய இருக்கைகள்
<p><strong>பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய இருக்கைகள்</strong></p> <p>திருப்பூர், டிச.7- திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட இருக்கைகள் பயன்படுத்தப்படாமல் கிடப் பில் போடப்பட்டுள்ளதால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் நகரில் ஏற்க னவே செயல்பட்டு வந்த &nbsp;பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் இரண்டும் சீர்மிகு நகரம் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலை யம் என்றும், புதிய பேருந்து நிலையத் திற்கு தீரன் சின்னமலை பேருந்து நிலையம் &nbsp;என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த பேருந்து நிலையங்கள் போக்குவரத் திற்கும், பயணிகளுக்கும் வசதியாக இருந் தது. புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு பேருந்து நிலையங்களும் தற்போது முன்பு இருந்ததை விட வசதி குறைவானதாக மாறி யுள்ளன. குறிப்பாக, தீரன் சின்னமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பதற்கு, அமர்வதற்கு உரிய வசதிகள் இல்லை. அதே சமயம் இந்த இரண்டு பேருந்து நிலையங் கள் தவிர, திருப்பூர் தாராபுரம் சாலை கோவில் &nbsp;வழியில் மற்றொரு பேருந்து நிலையம் புதி தாக கட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு புதிய இருக்கைகள் வாங்கப் பட்டுள்ளன. அவற்றை இங்கு பொருத்துவ தற்கு இன்னும் ஏற்பாடு செய்யப்படவில்லை. &nbsp;இந்த புதிய இருக்கைகளை தீரன் சின்ன மலை பேருந்து நிலைய வளாகத்தில் நடை பாதை பகுதியில் மொத்தமாக குவித்து வைத் திருக்கின்றனர். இது எப்போது பயன்பாட் டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிய வில்லை. இதே பேருந்து நிலையத்தில் பயணி கள் பேருந்திற்காக நீண்ட நேரம் நின்று கொண்டே காத்திருக்க வேண்டியுள்ளது. அமர்ந்திருப்பதற்கு உரிய இருக்கை வசதி &nbsp;இல்லை. எனவே குவித்து வைத்திருக்கப்ப டும் புதிய இருக்கைகளில், தீரன் சின்னமலை &nbsp;பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வ தற்கு இருக்கைகளை பொருத்த வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தீரன் சின்னமலை பேருந்து நிலையத் திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணிகள் &nbsp;நீண்ட நேரம் பேருந்துக்காக கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே உட னடியாக இங்கு இருக்கைகளை அமைத்து &nbsp;பயணிகள் உட்காருவதற்கு திருப்பூர் மாந கராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கோரியுள்ளது. புத்தம் புதிய இருக்கைகளை கொள்முதல் செய்து ஓரம் &nbsp;கட்டி வீணடிப்பது நியாயம்தானா?, இதற்காக &nbsp;பணத்தை விரயம் செய்வது சரியா? என்றும் &nbsp;கேள்வி எழுப்பியுள்ளது. எனவே பயணி கள் பொதுமக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் &nbsp;கொண்டு, வாங்கப்பட்டிருக்கும் புதிய &nbsp;இருக்கைகளை உடனடியாக பயன்பாட் டுக்கு கொண்டு வர வேண்டும். தீரன் சின்ன மலை பேருந்து நிலையத்தில் இருக்கை களை பொருத்த வேண்டும். மக்களின் வரிப் பணத்தை வீணாக்கக்கூடாது என்று பயணி கள் எதிர்பார்க்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.