ஏப்.10 முதல் சுங்கச் சாவடிகளில் புதிய நடைமுறை
8 Apr 2026, 5:30 am

ஏப்.10 முதல் சுங்கச் சாவடிகளில் புதிய நடைமுறை

சென்னை, ஏப்.7 - தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு மிக முக்கியமான மாற்றத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இனி பாஸ்டேக் முறை முதன்மையானதாக இருக்கும். பாஸ்டேக் வசதி இல்லாத வாகனங்கள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தலாம். எனினும், பாஸ்டேக் இல்லாமல் பயணிப்போர் வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு வாகன உரிமையாளர்கள் மொபை எண் மூலம் தங்களது பாஸ்டேக் கணக்கை மூன்று நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.