திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பையில் கிடந்த புதிய பாதுகாப்பு கவச உடைகள்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பையில் கிடந்த புதிய பாதுகாப்பு கவச உடைகள்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 7- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள குப்பை தொட்டி யில் புதிய பாதுகாப்பு கவச உடைகள் கொட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில், பயன்பாடுத்தப்படாத புதிய பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ - கிட்கள்) குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீல் பிரிக்கப்படாத நிலையில் இருந்த இந்த கவச உடை கள், கையுறைகள் மற்றும் முகக்கவ சங்கள் மீண்டும் பயன்படுத்தும் வகை யில் இருந்தும், அலட்சியமாக குப்பை யில் கொட்டப்பட்டுள்ளன. கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களை பாது காக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கிய பிபிஇ கிட்கள், தற்போது ஆட்சியர் அலுவலக வளாகத் திலேயே குப்பையோடு குப்பையாக கிடப்பது அரசின் வரிப்பணத்தை வீண டிக்கும் செயல். இவற்றின் தேவை முடிந்திருந்தால், அரசு மருத்துவம னைகள் அல்லது ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கியிருக்கலாம். காலாவதியா னால், மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி அழித்திருக்க வேண்டும். ஆனால், பயன்படக்கூடிய இவற்றை இப்படி வீசப்பட்ட சம்பவம் தொடர் பாக, குப்பையில் கொட்டப்பட்ட பிபிஇ கிட்கள் எந்தத் துறைக்கு வழங்கப்பட் டவை, அவை ஏன் இவ்வாறு அலட்சி யமாக அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி யாக விசாரணை நடத்தி, குற்றவாளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப் பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.</p>
