தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்லடம் தாலுகாவில் நீண்ட கால வறட்சிப் பகுதிகளுக்கு நீராதாரத்தை ஏற்படுத்த புதிய திட்டம்

19 Dec 2025, 6:05 pm
பல்லடம் தாலுகாவில் நீண்ட கால வறட்சிப் பகுதிகளுக்கு நீராதாரத்தை ஏற்படுத்த புதிய திட்டம்

பல்லடம் தாலுகாவில் நீண்ட கால வறட்சிப் பகுதிகளுக்கு நீராதாரத்தை ஏற்படுத்த புதிய திட்டம்

லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலு காவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி  கிராமங்கள் நீண்ட காலமாக வறட்சி யின் பிடியில் சிக்கியிருக்கின்றன. இப்ப குதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கே கோவை, சூலூர், கிழக்கே பல்லடம், வடக்கே திருப்பூர் ஆகிய நகரங்கள் சூழ்ந்திருக்கும் இந்த வட்டாரத்தில் இருக்கும் கிராமங்கள் நீராதாரம் இல் லாததால் ஒப்பீட்டளவில் மிகவும் பின் தங்கியிருக்கின்றன. குறிப்பாக பல்லடம் வட்டத்தில்  பல்லடம் கடல் மட்டத்தில் இருந்து 367  மீட்டர் (1204 அடி) உயரத்தில் உள்ளது.  சாமளாபுரம் 350 மீட்டர் (1148 அடி) உய ரம் உள்ளது. அதேசமயம் பல்லடம் வட்டத்தில் மேற்கு மற்றும் தெற்கு பகு திகளை உள்ளடக்கிய கிராமங்கள் கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்சம் 442 மீட்டர் (1450 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது பல்ல டத்தை ஒப்பிட இந்த வட்டார பகுதிகள்  சராசரியாக 230 அடி உயரத்தில் மேட் டுப்பாங்காக அமைந்துள்ளன. எனவே  மழை பெய்தாலும் உடனே இப்பகுதிக ளில் தண்ணீர் தேங்காமல் வடிந்து விடு கின்றன. குறிப்பாக, கோடாங்கிபாளையம்,  பருவாய், மல்லேகவுண்டம்பாளை யம், கே.கிருஷ்ணாபுரம், புளியம் பட்டி, பணிக்கம்பட்டி, அனுப்பட்டி, வடு கபாளையம் புதூர், சித்தம்பலம், இச் சிப்பட்டி, பூமலூர் (தெற்கு பகுதி),  கேத்தனூர் உள்ளிட்ட ஊராட்சிகள்  மற்றும் மாதப்பூர் வரையுள்ள பகுதிக ளும் இதில் உள்ளடங்கியுள்ளன. இங்கு பிரதானமாக விவசாயமும், கோழிப் பண்ணைகளும், கறவை மாடு கள் வளர்த்து பால் உற்பத்தியும், சார் புத் தொழிலாக விசைத்தறிக் கூடங்க ளும் உள்ளன.  1000 அடிக்கு கீழே இறங்கிய நிலத்தடிநீர் நிலையான நீராதாரம் இல்லா ததால் ஏறத்தாழ 1000 அடி வரை ஆழ்து ளைக் கிணறுகள் அமைத்து, காய் கறி, வெங்காயம், தக்காளி, கத் தரி, மிளகாய், மக்காச்சோளம் உள் ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கின்ற னர். அதேசமயம் நிலத்தடி நீர் மட்டம்  வெகு கீழாகச் சென்று விட்டது. ஆழ்கு ழாய்கள் தோண்டினாலும் கிடைக்கும் நீர் உவர்ப்புத் தன்மையாக பயன்ப டுத்த முடியாத நிலைக்குப் போய்விட் டது. இதனால் தற்போது விவசாயமும்  கேள்விக்குறியாகி உள்ளது.  எனவே இந்த வட்டார மக்கள்  தங்கள் தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்ப டுத்தும் நிலையில் உள்ளனர். விவசா யம், கறவை மாடு வளர்ப்பு ஆகிய வற்றிற்கு தண்ணீர் இன்றியமையாத தேவையாக இருக்கும் நிலையில், இதற்கு கணிசமான தொகையை செல விட வேண்டி உள்ளது. மேலும் கோடை  காலத்தில் குடிநீரையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நெருக்கடியில் இப்பகுதி மக்கள் உள்ள னர். எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் இந்த வட்டாரத்திற்கு அருகிலேயே  பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட் டத்தில் நீர் பெறக்கூடிய பகுதிகள் உள் ளன. எனவே பிஏபி திட்டத்தில் விரி வாக்கம் செய்து உபரி நீரை இந்த வறட் சிப் பகுதிகளுக்கு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கை கடந்த நாற்பது, ஐம் பது ஆண்டுகளாக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. பிஏபி திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் நடை பெற்ற நிலையில் 1992ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இறு தித் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஏற்கெனவே இருக்கும் பாசனப் பரப்பு கள் தவிர புதிய பகுதிகள் எதையும் விரி வாக்கம் செய்து இத்திட்டத்தில் இணைக்கக் கூடாது என்று உத்தர விட்டு தீர்ப்பளித்துள்ளது. எனவே மேற் கண்ட பகுதிகளுக்கு பிஏபி திட்டத்தை  விரிவாக்கம் செய்வது நடைமுறை சாத் தியமில்லை. அதேசமயம் இப்பகுதி யில் வறட்சியைப் போக்க ஏதேனும் ஒரு  வழி முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடம்  தொடர்ந்து இருந்து வருகிறது. மாற்றுத் திட்டம் தேவை இந்த நிலையில்தான், விவசாயி கள் மற்றும் இந்த வட்டார கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாது காப்பதற்கு, நடைமுறை சாத்திய மான ஒரு மாற்றுத் திட்டத்தை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் முன்வைத் துள்ளது. நொய்யல் ஆற்றில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் வரும்  நீரைப் பயன்படுத்தி இந்த வட்டாரத் தில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர்  நிரப்பினால் நிலத்தடி நீர் மட்டம் உய ரும் என்பதே இந்த திட்டம். குறிப்பாக  நொய்யல் ஆறு உற்பத்தி ஆகும் இடத் தில் இருந்து வேலாயுதம்பாளையம் அருகே  நொய்யல் கிராமத்தில் சென்று  சேரும் இடம் வரை 32 குளங்கள் உள் ளன. இவை எல்லாம் நூற்றாண்டுக ளுக்கு முன்பு மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. எனி னும் அதற்குப் பிறகு புதிதாக வேறு  பாசனத் திட்டம் ஏதும் உருவாக்கப்பட வில்லை என்று விவசாயிகள் சங்கத்தி னர் கூறினர். நொய்யல் நீரை குட்டைகளில் நிரப்புக நொய்யல் ஆற்றில் மழை, வெள் ளப்பெருக்கு ஏற்படும் போது, சாமளா புரம் அருகே நீரேற்று நிலையம் அமைத்து, 16 ஊராட்சிகளில் உள்ள 20  பெரிய குட்டைகள் மற்றும் 100 சின்ன  குட்டைகளில் நீர் நிரப்பினால் இந்த வட் டாரம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் மூலம் விவசாயம், கால் நடை வளர்ப்பு மற்றும் இதர தேவை களுக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப் புள்ளது, இத்திட்டத்தை நிறைவேற்ற வும் குறைந்த அளவே நிதி தேவைப் படும். எனவே தமிழக அரசு இத்திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்து, நிதி  ஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்  என்று விவசாயிகள் சங்க பல்லடம் ஒன் றியத் தலைவர் வை.பழனிசாமி, ஒன்றி யப் பொருளாளர் எஸ்.லோகநாதன் ஆகியோர் தெரிவித்தனர். இத்திட்டத்தை நிறைவேற்றும் அதே சமயம் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும், கழிவுகள் கொட்டப் படுவதையும் தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கள் வலியுறுத்தினர். வணிக நோக்கம் அல்ல, வாழ்வாதாரம்! கோவையில் சூயஸ், திருப்பூரில் என்.டி.ஏ.டி.சி.எல். ஆகிய நிறுவ னங்கள் தண்ணீரை வர்த்தகப் பொரு ளாக விற்பனை செய்து வரும் நிலை யில், கிராமப்புறங்களைப் புறக்கணிக் கக் கூடாது. மக்களின் அடிப்படை உரிமை, விவசாயிகளின் வாழ்வாதா ரம் என்ற முறையில் பல்லடம் வட்டா ரத்தில் மேற்கு மற்றும் தெற்குப் பகுதி  ஊராட்சிகளில் வாழக்கூடிய 1 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை  மேம்பாட்டுக்கு இத்திட்டத்தை செயல் படுத்துவது அவசியம். நீண்ட கால மாக கவனிப்பாரற்று இருக்கும் இப்பகு தியின் சமூகப் பொருளாதார மேம்பாட் டுக்கும் நொய்யலில் மழை, வெள்ளப் பெருக்கு கால நீரை இந்த வட்டார குளம், குட்டைகளுக்கு நிரப்பும் திட் டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  கோரிக்கை மாநாடு இதற்காக டிச.20 சனிக்கிழமை (இன்று) பல்லடம் லட்சுமி மில் அருகே  தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்த வட்டாரத் தின் விவசாயிகளும், மக்களும் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் அணிதிரண்டு கோரிக்கையை வலியுறுத்த உள்ள னர். இக்கோரிக்கையை அரசு நிறை வேற்றும்பட்சத்தில் இந்த வட்டாரத் தின் முகத்தோற்றம் நிச்சயம் மாற் றம் அடையும். வே.தூயவன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.