தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘உங்கள் கனவை சொல்லுங்க’ புதிய திட்டம் ஜன.9-இல் துவக்கம்

6 Jan 2026, 4:23 pm
‘உங்கள் கனவை சொல்லுங்க’ புதிய திட்டம் ஜன.9-இல் துவக்கம்
<p><strong>&lsquo;உங்கள் கனவை சொல்லுங்க&rsquo; புதிய திட்டம் ஜன.9-இல் துவக்கம்</strong></p> <p>சென்னை, ஜன. 6- தமிழக அரசின் புதிய திட்டமான &lsquo;உங்கள் கனவை &nbsp;சொல்லுங்க&rsquo; திட்டத்தை ஜனவரி 9 ஆம் தேதி திரு வள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பள்ளிக் &nbsp;கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலை மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு &nbsp;திகழ்வதாகத் தெரிவித்தார். பல நிதி நெருக்கடிகள் &nbsp;இருந்தாலும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருவதாகவும், இதைப் பார்த்து பல மாநிலங்கள் &nbsp;இதுபோன்ற திட்டங்களைக் கொண்டுவர நினைப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவரை யாரும் செய்யாத நிகழ்வாக, ஒவ்வொரு &nbsp;குடும்பத்தினரிடமும் அவர்களின் கனவை கேட்கும் திட்டம் இதுதான் என்று அமைச்சர் விளக்கினார். ஒரு &nbsp;படிவத்தில் 10 திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். இதில் மக்கள் முதன்மையாக நினைக்கும் 3 திட்டங்களை கூறச் சொல்வோம் என்று அவர் தெரிவித்தார். &nbsp;வீடு, குடும்பம், மாவட்டம் சார்ந்த கருத்துகளை தனிநபர் தெரிவிக்கும் வகையில் திட்டம் செயல்படும் &nbsp;என்றும், இந்த திட்டத்தின் மூலம் 2030-க்குள் என்ன வெல்லாம் செய்யலாம் என்ற ஒரு மிஷினரி ஆவ ணத்தை உருவாக்க முடியும் என்றும் முதலமைச்சர் கருதுவதாக அமைச்சர் தெரிவித்தார். 30 நாட்கள் மக்களிடம் இருந்து கருத்துகள் பெறப்படும். ஜனவரி 11 ஆம் தேதி முதல் இந்த &nbsp;திட்டம் தொடர்பான இணையதளம் செயல்பாட்டுக்கு &nbsp;வரும். இணையதளம் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை சொல்லலாம். இளை ஞர்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அடுத்த மாதம் கருத்துகள் பெறப்பட்டு, மாவட்டம் தோறும் கருத்தரங்கம் நடைபெ றும் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு சட்டப் பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஜன.20 ஆம் தேதி தொடங்கு கிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி &nbsp;உரை நிகழ்த்துவார். இந்த கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு முத லமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி விவா திப்பது வழக்கம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்ச ரவை கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங் கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, முத லீட்டாளர் மாநாடு நடத்துவது, அமல்படுத்த வேண்டிய &nbsp;திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் &nbsp;ஆலோசனை நடைபெற்றது. &lsquo;உங்க கனவை சொல்லுங்க&rsquo; என்ற புதிய திட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. &nbsp;முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை மற்ற &nbsp;மாநிலங்களும் பின்பற்றி வருவதால் &lsquo;சூப்பர் ஸ்டார்&rsquo; என்று தமிழக அரசு பெயர் பெற்றுள்ளது. குடும் பங்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து நிறைவேற்ற உள்ளதாக &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூ தியத் திட்டத்திற்கு இந்த அமைச்சரவையில் ஒப்புதல் &nbsp;அளிக்கப்பட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால &nbsp;பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத் திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவா திக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.