முந்தய பக்கம்

ஏப்.10 முதல்  சுங்கச் சாவடிகளில்  புதிய நடைமுறை

7 Apr 2026, 5:38 pm
ஏப்.10 முதல்  சுங்கச் சாவடிகளில்  புதிய நடைமுறை
<p><strong>ஏப்.10 முதல் &nbsp;சுங்கச் சாவடிகளில் &nbsp;புதிய நடைமுறை</strong></p> <p>சென்னை, ஏப்.7 - தேசிய நெடுஞ்சா லைகளில் பயணம் செய்வோருக்கு மிக &nbsp;முக்கியமான மாற்றத்தை &nbsp;இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம் அறி வித்துள்ளது. ஏப்ரல் 10 &nbsp;முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி களில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை &nbsp;முழுமையாக ரத்து &nbsp;செய்யப்படுகிறது. &nbsp;இனி பாஸ்டேக் &nbsp;முறை முதன்மையான தாக இருக்கும்; பாஸ் டேக் வசதி இல்லாத வாகனங்கள் யுபிஐ மூலம் கட்டணம் செலுத் தலாம். எனினும், பாஸ்டேக் இல்லாமல் பயணிப்போர் வழக்க மான கட்டணத்தைவிட 1.25 மடங்கு கூடுதல் தொகையை அபராத மாகச் செலுத்த நேரி டும். டிஜிட்டல் முறை யில் கட்டணம் செலுத்தத் தவறும் வாகனங்களுக்கு வாகன உரிமையாள ரின் மொபைல் எண் ணுக்கு மின்னணு அறி விப்பு அனுப்பப்படும். மூன்று நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், வழக்கமான கட்டணத் தின் இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. &nbsp;அடிக்கடி நெடுஞ்சா லையில் பயணிப்போர் நலனில் அக்கறை கொண்டு பாஸ்டேக் ஆண்டு பாஸ் திட்டத்தை அரசு ஊக்கு விக்கிறது. இத்திட்டத் தில் சேர விரும்புவோர் &lsquo;ராஜ்மார்க் யாத்ரா&rsquo; செயலி அல்லது இந்தியத் &nbsp;தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் &nbsp;MoRTH இணையதளங் கள் மூலம் விண்ணப்பிக் கலாம். அரசு அலுவலகப் &nbsp;பணிகளுக்காகப் பய ணிக்கும் வாகனங்க ளுக்கு மட்டும் கட்டண &nbsp;விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதோடு, அடையாள &nbsp;அட்டை &nbsp;காட்டி விலக்கு &nbsp;பெறும் பழைய நடை முறை இனி செல்லாது என்பதும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram