முந்தய பக்கம்

திரு.வி.க நகரில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு

2 Mar 2026, 3:30 pm
திரு.வி.க நகரில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு

திரு.வி.க நகரில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திறப்பு

சென்னை, மார்ச் 2- சென்னை திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.5.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளியின் புதிய பள்ளிக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி (திரு.வி.க.நகர்), ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram