தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப புதிய திட்டம்: திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிடம் கோரிக்கை

14 Feb 2026, 4:33 pm
குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப புதிய திட்டம்:  திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிடம் கோரிக்கை
<p><strong>குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்ப புதிய திட்டம்: &nbsp;திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிடம் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், பிப்.14 - பல்லடம் தாலுகாவில் வறட்சி யின் பிடியில் சிக்கியுள்ள மேற்கு மற் றும் தெற்கு பகுதிகளில் வறட்சியைப் &nbsp;போக்கிட குளம், குட்டைகளுக்கு நீர் &nbsp;நிரப்பும் புதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று திமுக தேர்தல் அறிக்கை குழுவிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். &nbsp;சனிக்கிழமை காரணம்பேட்டை வெங்கடேஸ்வரா மஹாலில் நடை பெற்ற திமுக தேர்தல் அறிக்கை குழு &nbsp;மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்ல டம் ஒன்றியக்குழு சார்பில் &nbsp;கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. &nbsp;பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி, ஒரு &nbsp;நகராட்சி, உள்ளது. பல்லடம் எப்பொ ழுதும் வறட்சி பகுதியாகவும் மழை &nbsp;மறைவு பகுதியாகவும் உள்ளது. &nbsp;கிடைக்கும் மழைநீரை வைத்துத் தான் மக்காசோளம், காய்கறி பயிர் கள், கால்நடை வளர்ப்பு, கறவை &nbsp;மாடுகள் வளர்ப்பு, கோழிப்பண் ணை, விசைத்தறி, சைசிங் போன்ற விவசாயம், தொழில்களில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர். &nbsp;கோடாங்கிபாளையம், சுக்கம்பா ளையம், செம்மிபாளையம், க.அய் யம்பாளையம், பனிக்கம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி, பருவாய், கே.கிருஷ்ணாபுரம், கேத்தனூர், புளி யம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளை யம் புதூர், பூமலூர் தெற்கு, இச்சிப் பட்டி, 63 வேலம்பாளையம் தெற்கு, மல்லேகவுண்டன்பாளையம் போன்ற ஊராட்சிகளில் உள்ள குளம் &nbsp;குட்டைகளுக்கு நீர் நிரப்ப வேண் டும். குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பல சிற்றாறுகளை இணைத்துக் கொண்டு சூலூர், சாம ளாபுரம் வழியாக கரூர் வரை சென்று &nbsp;காவிரியில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலங் களில் நொய்யல் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து வருகிறது. ஆண்டு தோறும் சுமார் 7 டிஎம்சி அளவுக்கு மழைக்காலத்தில் தண்ணீர் நொய் யல் ஆற்றில் செல்கிறது. இதில் 4 &nbsp;டிஎம்சி அளவு மழைநீரை மேற்கண்ட &nbsp;ஊராட்சிகளில் உள்ள 25க்கும் மேற் பட்ட பெரிய குட்டைகளுக்கும், 100க்கும் மேற்பட்ட சிறிய குட்டைக ளுக்கும் நீர் நிரப்பினால் இந்த வட்டா ரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். &nbsp;இதன்மூலம் விவசாயிகள் பொதுமக் கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். இதை திமுக தேர்தல் அறிக் கையில் சேர்த்து அறிவிக்க வேண் டும் என்று விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொண்டனர். &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் பல்லடம் ஒன்றியத் தலைவர் கே.வி.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் வை.பழனிசாமி, ஒன்றி யப் பொருளாளர் எஸ்.லோகநாதன் &nbsp;உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கை மனுவை அளித்தனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட திமுக தேர்தல் அறிக்கை குழுவினர், &nbsp;இதுகுறித்து தேர்தல் அறிக்கைக்குழு &nbsp;திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய &nbsp;நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.