தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

23 Dec 2025, 4:05 pm
சென்னை விரைவு செய்திகள்

பெரியார் நகரில் ஜன.13-ல்  புதிய பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு

சென்னை, டிச.23- சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் துணை தபால் நிலையத்தில், புதிய பாஸ்போர்ட் சேவை மையம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறையின் ‘ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரு பாஸ்போர்ட் மையம்’ என்ற திட்டத்தின் கீழ், வடசென்னை தொகுதிக்கான இந்த மையம் அமைக்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இங்கு தினசரி 80 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்; ஆனால் தட்கல் வசதி இருக்காது. மேலும், சென்னை மண்டலத்தில் இந்த ஆண்டு இதுவரை 4.77 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ள தாகவும், ஆண்டு இறுதிக்குள் இது 5.35 லட்சத்தை எட்டும் என்றும் அவர் கூறி னார். விழிப்புணர்வுக்காகச் சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறப்பு அரங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும்  பணத்தை திரும்பப் பெறும் வழிமுறை

சென்னை, டிச.23-  10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத வங்கிக் கணக்குகளில் கோரப்படாமல் கிடக்கும் ரூ.1.84 லட்சம் கோடியை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ‘https://udgam.rbi.org.in இணையதளத்தில் விவரங்களை உள்ளிட்டு கோரப்படாத வைப்புத்தொகை இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். பிறகு வங்கியின் எந்த கிளைக்கும் ஆதார், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை போன்ற கேஒய்சி ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும். வங்கி ஏற்றால் வட்டியுடன் முழு தொகையும் திரும்ப வழங்கப்படும். இந்த மாதம் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் பணத்தை திரும்பப் பெறும் உரிமை உண்டு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கழுத்து, முதுகு வலிக்கு ஆளாகும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் சென்னை, டிச.23- 50-60 வயதினருக்கு மட்டும் வந்த கழுத்து மற்றும் முதுகு வலி, இன்று 20 வயது இளைஞர்களை பெருமளவில் பாதிக்கிறது. ஸ்மார்ட்போன் அதிக பயன்பாடே இதற்கு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித தலையின் எடை சராசரியாக 4.5-5 கிலோ இருந்தாலும், 60 டிகிரி கோணத்தில் தலையை குனிந்து போன் பார்க்கும்போது கழுத்து எலும்புகள் மீது சுமார் 27 கிலோ எடைக்கு சமமான அழுத்தம் விழுகிறது. இதை மருத்துவர்கள் ‘டெக்ஸ்ட் நெக்’ என அழைக்கிறார்கள். தொடர்ந்து இப்படி பயன்படுத்துவதால் கழுத்து தசைகள் பலவீனமடைந்து நாளடைவில் நீண்ட கால வலியாக மாறுகிறது. எச்சரிக்கை அறிகுறிகள்: கழுத்தில் பிடிப்பு, தோள்பட்டை வலி, தலைவலி, கைகள் மரத்துப்போதல். தடுக்கும் வழிமுறைகள்: போனை கண் மட்டத்திற்கு உயர்த்திப் பிடித்தல், 20-20-20 விதி (ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 அடி தூரத்தில் உள்ள பொருளை 20 வினாடிகள் பார்த்தல்), தினமும் 15 நிமிடம் யோகா அல்லது உடற்பயிற்சி, தேவையற்ற சமூக வலைதள பயன்பாட்டை குறைத்தல். தொழில்நுட்பம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, உடல்நலத்தை கெடுக்கும் காரணியாக மாறக்கூடாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். முடங்கியது ஐஆர்சிடிசி இணையதளம்:   தட்கல் டிக்கெட்  கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம்! சென்னை, டிச.23- கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாரக்கடைசியில் சொந்த ஊர் செல்ல செவ்வாயன்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியதால் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். புதனன்று டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், செவ்வாயன்று காலை தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கியபோது இணையதளம் செயலிழந்தது. டிக்கெட் பதிவு செய்ய முயன்றபோது தொடர்ச்சியாக ‘error’ என்ற செய்தி மட்டுமே காட்டப்பட்டது. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த பிரச்சனை நீடித்தது. பின்னர் இணையதளம் சரியாக செயல்பட்டபோது, ஏற்கெனவே அனைத்து டிக்கெட்களும் முடிந்துவிட்டதாக பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இடைத்தரகர்கள் தானியங்கி மென்பொருள் மூலம் பெரும்பாலான டிக்கெட்களை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டதாக இணையத்தில் பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். வேலூரில் இருந்து 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம் வேலூர், டிச.23-  கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையையொட்டி வேலூரில் இருந்து நாளை முதல் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட வுள்ளதுடன், பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய்கிழமை யுடன் அரையாண்டு தேர்வு முடிந்து புதன் முதல் விடுமுறை தொடங்குகிறது. இதையொட்டி பயணிகள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வேலூரில் இருந்து சென்னைக்கு 20 பேருந்துகள், பெங்களூருக்கு 10 பஸ்கள், ஒசூருக்கு 10 பஸ்கள் என மொத்தம் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 நாள் விவசாயிகள் கூட்டம்: ஆட்சியர் தகவல் செங்கல்பட்டு, டிச.23- செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கோட்ட அளவில் செவ்வாயன்று செங்கல்பட்டு சாராட்சியர்  தலைமையில் நடந்தது. புதனன்று மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வியாழனன்று தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் இக்கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார். தங்கம் விலை சென்னை, டிச.23- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக செவ்வாயன்று கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.12,770-க்கும், சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.212 அதிகரித்து ரூ.13,931-க்கும், சவரனுக்கு ரூ.696 அதிகரித்து ரூ.1,11,448-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் 4 முறை அதிகரித்தும், 2 முறை குறைந்தும் உள்ளது. வெள்ளி விலை அதிரடியாக ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.234-க்கும், கிலோ ரூ.2,34,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.