தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிங்கம்புணரியில் கூட்டுறவு தொடக்க வேளாண்- ஊரக வளர்ச்சி வங்கிக்கு புதிய அலுவலக கட்டிடம்

27 Feb 2026, 5:32 pm
சிங்கம்புணரியில் கூட்டுறவு தொடக்க வேளாண்-   ஊரக வளர்ச்சி வங்கிக்கு புதிய அலுவலக கட்டிடம்
<p><strong>சிங்கம்புணரியில் கூட்டுறவு தொடக்க வேளாண்- &nbsp; ஊரக வளர்ச்சி வங்கிக்கு புதிய அலுவலக கட்டிடம்</strong></p> <p>சிவகங்கை,பிப்.27- &nbsp;சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் &nbsp;கட்டப்பட்டுள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் &nbsp;ஊரக வளர்ச்சி வங்கிக்கான புதிய &nbsp;அலுவலக கட்டிடத்தினை பிப்ரவரி 27 அன்று &nbsp;கூட்டுறவுத்துறை அமைச்சர் &nbsp;கேஆர்.பெரியகருப்பன் &nbsp;திறந்து வைத்தார். &nbsp;இதில் அமைச்சர் பேசியதாவது: கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது, சிங்கம்புணரி பகுதியில் கடந்த &nbsp;45 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டு, அதனுடைய சேவைகள் வாயிலாக விவசாய பெருங்குடி மக்கள் பெருமள வில் பயனடைந்து வருகின்றனர். &nbsp;இவ்வங்கிக்கான கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. இவ்வலுவ லகத்திற்கு புதிய கட்டிடம் ஏற்படுத்திடும் பொருட்டு, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் மற்றும் நான் வகிக்கும் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் என்ற முறையிலும் கடந்த மானிய கோரிக்கையின் போது, கூட்டுற வுத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளில், 2025-2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அறிவிப்புபடி சிங்கம்புணரி பேரூராட்சி பகு தியில் &nbsp;கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ரூபாய் 42 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு அறை &nbsp;மற்றும் பாதுகாப்பு கதவுடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்ட &nbsp;அரசாணை பெறப்பட்டு, கடந்த 14.7.2025 &nbsp;அன்று &nbsp;அப்புதிய கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கான புதிய அலுவலக கட்டி டத்தின் கட்டுமானப் பணி முழுமையாக சிறந்த முறையில் நிறைவு பெற்றுள்ள தைத் தொடர்ந்து, இன்றையதினம் &nbsp;பயன்பா ட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். &nbsp;இந்நிகழ்ச்சிகளில், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, &nbsp;பேரூராட்சி &nbsp;துணைத்தலைவர் செந்தில் குமார், துணைப் பதிவாளர் (பாம்கோ) பாலு, சிங்கம்புணரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை - ஊரக வளர்ச்சி வங்கி நிர்வாக அலுவலர் சுந்தர பெருமாள், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் நாகநர்மதா, உதவி செயற்பொறியாளர் (சிங்கம்புணரி) சாத்தப்பன், உதவி மின் பொறியாளர் (சிங்கம்புணரி) பார்த்திபன் &nbsp;உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். படம் உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.