முந்தய பக்கம்

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்புப் பயிற்சி

16 Jun 2026, 10:37 pm
புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்புப் பயிற்சி

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்புப் பயிற்சி

சென்னை: 17-ஆவது சட்டமன்றத் தேர்த லில் வெற்றி பெற்று தவெக புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அவையின் மரபு கள் மற்றும் சட்டசபை நடைமுறைகளை விளக்கும் இருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. இம்முகாமை முதலமைச்சர் விஜய் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத் தார். இத்தேர்தலில் 145 புதுமுகங்கள் சட்ட மன்றத்திற்குத் தேர்வாகி யுள்ளனர்; இதில் தவெக சார்பில் மட்டும் 101 பேர் முதன் முறை எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.

திமுக புறக்கணிப்பு

இப்பயிற்சி முகாமின் முதல் நாளில் 104 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக் குழு தலைவர் ஆர்.செல்லசுவாமி, கீழ்வேளூர் எம்.எல்.ஏ. டி.லதா மற்றும் விசிக, மமுக, மதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் பங்கேற் றனர். அதிமுக சார்பில் ஒருவர் மட்டும் பங்கேற்ற நிலையில், திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக இம் முகாமைப் புறக்கணித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சட்டசபை நிகழ்வுகளை முழு மையாக நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஜூன் 18 அன்று ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

Share
FacebookXWhatsAppTelegram