தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

14 Nov 2025, 1:26 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு மீனவர் நல வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் புதிய  தலைவர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சேர்ந்த ஜோசப்  ஸ்டாலின் வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏ.தாஜுதீன், என்.ஜெ. போஸ், பி. அந்தோணி ஸ்டாலின், ஏ.ஜோஸ், வி.செல்வபாரதி, ஆர்.வி.கணேஷ், ஏ.பி.பன்னீர் செல்வம், எம்.முருகன், எக்ஸ்.லெனின், கோ.  மனோகரன், எம்.ஜெபமாலை பர்னாந்து, ஜேசுராஜா, பி.எஸ்.  ஜேசுராஜ் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசித ழில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு  ஆண்டு காலம் பதவி வகிப்பர். அலுவல் சாரா உறுப்பினர் களின் அகவிலைப்படி மற்றும் பயணப்படி போன்றவற்றிற்கு  வாரியத்தின் உறுப்பினர் செயலரால் ஒப்புதல் அளிக்கப்பட  வேண்டும். அரசு பதவியில் உள்ள அலுவல் சாரா உறுப்பி னர்கள் வாரியத்திலிருந்து வேறு எந்த பயன்பாடுகளையும் பெற முடியாது.

கடலுக்குச் செல்ல தடை!

பாம்பன்: வங்கக்கட லில் சூறைக்காற்று வீசுவ தால் பாம்பன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பான  இடத்தில் நிறுத்தி வைக்க வும் மீனவர்களுக்கு மீன்வளத் துறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ள னர்.

முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி

சென்னை: வேட்பு மனுவில் சொத்து விப ரங்களை மறைத்த வழக்கில், உயர் நீதிமன்ற  உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீர மணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுவில் விபரங் களை மறைத்தது தொடர் பாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு செல்லும் என உயர் நீதி மன்றம் முன்னதாக தீர்ப்பு வழங்கியிருந்தது.

தேவநாதனுக்கு  நவ.24 வரை சிறை

சென்னை: மயிலாப் பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் சரணடைந்த தேவநாதனை நவம்பர் 24 ஆம் தேதி வரை சிறை யில் அடைக்க உத்தர விடப்பட்டு ள்ளது. ரூ. 100 கோடி டெபாசிட் நிபந்த னையை நிறைவேற்றாத தால், தேவநாதனை கைது செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந் தது. இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, சிறப்பு நீதி மன்றத்தில் தேவநாதன் வெள்ளிக்கிழமை (நவ.14)  சரணடைந்தார்.

வெளியிட அனுமதி

சென்னை: இயக்கு நர் பிரபு சாலமன் இயக்கி யுள்ள ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் தயாரிப்பா ளரின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. ஒரு கோடி  ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த திரைப்பட இயக்குநர் பிரபு சால மனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.