கலைமகள் கல்வி நிறுவனத்தில் புதிய நூலகம் திறப்பு
12 Nov 2025, 3:20 pm
<p><strong>கலைமகள் கல்வி நிறுவனத்தில் புதிய நூலகம் திறப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை, நவ.12 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் விதமாக கலைமகள் கல்வி நிறுவனம் சார்பில் புதிய நூல கம் திறக்கப்பட்டுள்ளது. கலைமகள் கல்வி நிறுவன பள்ளி யான தாமரைப் பள்ளியில், மாணவர்களின் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு ‘புஸ்தகாலயா’ என்ற மாணவர்களுடைய நூலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் பெற்றோர் சு.ராஜேஷ்-ரா.சத்யா ஆகியோர் திறந்து வைத்த னர். நூலக திறப்பு விழாவிற்கு கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வரவேற்றார். துணை முதல்வர் நன்றி கூறி னார். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். </p>
