பாலியல் வன்முறை தடுப்பை புறக்கணித்த புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள்
8 Dec 2025, 4:39 pm

பாலியல் வன்முறை தடுப்பை புறக்கணித்த புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள்

ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர், டிச.8 - ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு களில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன் முறையைத் தடுப்பது பற்றிய அம்சங்கள் எது வும் இடம்பெறவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புதிய சட்டங்கள் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிப்ப தாகவும், கார்ப்பரேட் பெருமுதலாளி களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: நான்கு சட்டத் தொகுப்புகள்: உரிமைகள் பறிப்பு ‘ஏற்கனவே நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களில் பாலியல் வன்முறை தடுப்பு அம்சங்கள் இருந்தன. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்த நான்கு சட்டத் தொகுப்புகளிலும் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது’ என்று அவர் குற்றச் சாட்டை முன்வைத்தார். புதிய சட்டத் தொகுப்புகள் 150 ஆண்டு காலப் போராட்டத்தின் மூலம் தொழிலா ளர்கள் பெற்ற பல உரிமைகளைப் பறிப்பதாக அவர் கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக, 29 பழைய தொழிலாளர் சட்டங்கள் அழிக்கப் பட்டு, நான்கு புதிய சட்டத் தொகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது உழைக்கும் மக்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொழிலாளர் விரோத அம்சங்கள் ‘குறிப்பிட்ட கால நிர்ணய வேலை’ (Fixed-term employment) என்ற முறை யால் நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலா ளர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. 300 பேருக்குக் கீழ் வேலை செய்யும் நிறு வனங்கள் நிலை ஆணை (Standing Order) தேவையில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 74% தொழிற்சா லைகள் இந்த வரம்புக்குள் வருகின்றன. இந்த ஆலைகளை மூடுவதற்கு அரசு அனு மதி தேவையில்லை என்ற நிலை தொழிலா ளர்களின் பாதுகாப்பைப் பறிக்கிறது. வேலை நிறுத்தம் செய்வது அடிப்படை உரிமையாகும். ஆனால் புதிய சட்டப்படி, நோட்டீஸ் கொடுத்த 60 நாட்களுக்கு வேலை நிறுத்தத்திற்குச் செல்லக் கூடாது. மீறினால் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலை வர்களும் கைது செய்யப்படலாம், சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட லாம். 12 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், புதிய சட்டத் தொகுப்பில் தொழி லாளர் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், 20 பேருக்குக் கீழ் இருந்தால் நிறுவன மாகக் கருதப்படாது என்பதால், 62% சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில் வேலை செய் வோருக்கு இந்தச் சட்டங்கள் பொருந்தாது என ஜி.ராமகிருஷ்ணன் விவரித்தார். கார்ப்பரேட் கூட்டணி அரசின் சட்டம் மோடி தலைமையிலான அரசு இந்துத் துவா, கார்ப்பரேட் கூட்டணி அரசு என்று ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்தார். “கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. வெளிநாட்டு மூலதனங்கள் இந்தியா வர, அவர்கள் எளிதில் தொழில் நடத்துவதற் காக (Ease of Doing Business) தொழிலாளர் சட்டங்களை மதிக்கும் தேவையை அரசு புறக் கணித்துள்ளது” என்றும் அவர் கூறினார். உற்பத்தி மதிப்புக் கூட்டுதலில் தொழிலா ளர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் 2020-இல் 18.9% ஆக இருந்தது. தற்போது 15.9% ஆகக் குறைந்துள்ளது. அதேசமயம் முத லாளிகளின் லாபம் 38% என்பதிலிருந்து 51% ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சட்டங்கள் இந்தியாவில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைச் சட்டப்பூர்வமாக நிறுவனமயப்படுத்தி விட்டன என்றும் அவர் சாடினார். தொடரும் போராட்ட அறிவிப்பு விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது போல, இந்த நான்கு சட்டத் தொகுதிகளையும் ரத்து செய்யும் வரை பல கட்டப் போராட்டங்கள் தொடரும் என்று ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்தார். அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள், முறைசாரா தொழி லாளர்கள், கிக் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பு தொழிலாளர் உரிமை களுக்காகவும் தொடர்ந்து போராடப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். திருப்பரங்குன்றம் மற்றும் பிற பிரச்சனைகள் திருப்பரங்குன்றத்தில் அளவைக் கல்லில் தீபம் ஏற்றும் விவகாரம் ஆன்மீகப் பிரச்சனை அல்ல, அது அப்பட்டமான அரசியல். நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பது பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சிக்கலாம் என்று கூறி யிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், விலைவாசி உயர்வு, தொழிலாளர் உரிமை, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றுக் காகப் போராடுவோம் என்றும், பாஜக கல வரத்தைத் தூண்டும் விதமாகச் செயல்படு வதாகவும் அவர் கூறினார். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பிரச்சனையில் உள்ளதாகக் கூறி, அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.