தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கரூரில் அரசு ஊழியர் சங்க புதிய கட்டடம்

22 Nov 2025, 4:09 pm
கரூரில் அரசு ஊழியர் சங்க புதிய கட்டடம்

கரூரில் அரசு ஊழியர் சங்க புதிய கட்டடம்

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்

கரூர், நவ.22 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழுவிற்கு, ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு  விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி  கலந்து கொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். வரலாறும் வசதிகளும் 1955 ஆம் ஆண்டில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாடகம் நடத்தி அளித்த நிதியில் வாங்கப்பட்ட இடத்தில், தற்போது நவீன வசதிகளு டன் இக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி மையம், நூல கம், கூட்ட அரங்கு மற்றும் வெளியூர் ஊழி யர்கள் தங்கும் வசதிகள் உள்ளன. சகோதரனாக... எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி பேசுகையில், “அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களுக்கு, ஒரு சகோதரனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்குத் தூதுவனாகக் கொண்டு  சென்று நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித் தார். சிஐடியு வாழ்த்து வாழ்த்துரையின் போது, ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டபோது, சிஐ டியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களைப் பாது காத்த வரலாறு நினைவுகூரப்பட்டது. ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்க்கவும், இவ்வலுவலகம் எதிர்காலத்தில் தொழிலாளர்களைக் காக்கும் அரணாகத் திகழும்  என்றும் சிஐடியு சார்பில் வாழ்த்துக் கூறப்பட்டது.  மேலும், சிஐடியு நிர்மல் பள்ளி நிதியாக ரூ.10  ஆயிரத்தை, சிஐடியு தலைவர் ஜி.ஜீவானந்தத் திடம் நிர்வாகிகள் வழங்கினர். விழாவிற்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகிக்க, செயலாளர் பொன்.ஜெயராம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர்கள் ஆ.அம்சராஜ், எம்.செல்வ ராணி, முன்னாள் தலைவர் மு.அன்பரசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் கலைவா ணர் படத்தையும், மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் எம்.ஆர்.அப்பன் படத்தையும், முன்னாள் பொதுச்  செயலாளர் ஆ.செல்வம் தோழர் ஆர். முத்து சுந்த ரம் படத்தையும், பொருளாளர் ச.டேனியல் ஜெய சிங் விஜயராகவன் படத்தையும் திறந்து வைத்த னர். மாநிலப் பொதுச் செயலாளர் வெ.சோம சுந்தரம், நிர்வாகிகள் எம்.சுப்பிரமணியன், மு.ஞானத் தம்பி ஆகியோர் கட்டுமானப் பணியாளர்களைக் கௌரவித்தனர். விழாவில் வி.கணேசன் (எல்ஐசி), கெ.சக்தி வேல், து.சாமுவேல்சுந்தரபாண்டியன், ஐ.ஜான் பாட்சா (அறிவியல் இயக்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தணிக்கையாளர்கள் கே. செல்லமுத்து, எஸ்.தமிழ்மணி, துணைத் தலைவர் கள் சி.கண்ணன், வி.முருகேசன், எம்.கிருஷ்ண மூர்த்தி, ந.தமிழரசன், துணைச் செயலாளர்கள் கே. இளங்கோ, ஆ.சங்கர், எம்.பாஸ்கரன், பா.பிரவீனா,  செயற்குழு உறுப்பினர் வ.கோபி, இரா.முத்துமாரி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் லோ.பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.                (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.