தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விருகம்பாக்கம் கால்வாய் மீது புதிய மேம்பாலம் 6 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம்

7 Mar 2026, 2:36 pm
விருகம்பாக்கம் கால்வாய் மீது புதிய மேம்பாலம் 6 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம்
<p><strong>விருகம்பாக்கம் கால்வாய் மீது புதிய மேம்பாலம் 6 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம்</strong></p> <p>சென்னை, மார்ச் 7 - காளியம்மன் கோவில் தெருவில் ரூ.12 கோடி செலவில் விருகம்பாக்கம் கால்வாய் மீது புதிய பாலம் கட்டப்படுகிறது. கோயம்பேட்டையும் ஆற்காடு சாலையையும் இணைக்கும் வகையில் காளியம்மன் கோவில் தெரு உள்ளது. தெரு என்று அழைக்கப்பட்டாலும் அந்தப்பகுதியின் பிரதான சாலையாக இது உள்ளது. மிக குறுகலான இந்த சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அந்தச்சாலை 4 வழிப்பாதையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப இந்த தெருவில் விருகம்பாக்கம்-அரும்பாக்கம் கால்வாய் மீதான மேம்பாலம் அகலப்படுத்தி புதிதாக கட்டப்பட உள்ளது. எனவே பாலத்தை இடித்துவிட்டு புதிதாக அகலப்படுத்தி கட்டும் ரூ.12.31 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், &nbsp;தாமஸ் ஐயா துரை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் வழங்கும் நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறு வனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி. லிவிங்ஸ்டோன் எலியேசர், தனியார் நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். தாமஸ் ஐயாதுரை ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தப் பாலம் 180 நாட்களுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் இந்தப் பாலம் சாலை யில் நெரிசலின்றி வாகனங்கள் சீராக இயங்க உதவும். மேலும், குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிகப் பகுதிகளுக்கு இடையே தடையற்ற இணைப்பை உருவாக்கும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.