தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்

6 Dec 2025, 2:48 pm
மதுரையில் புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்
<p><strong>மதுரையில் புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்</strong></p> <p>சென்னை, டிச. 6 - மதுரை மேலமடை சந்திப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை மேலமடை சந்திப்பில் &nbsp;ரூ. 150.28 கோடி செலவில் கட்டப்பட் டுள்ள புதிய மேம்பாலத்தை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், ஞாயிறன்று &nbsp;திறந்து வைக்கிறார். மதுரை தொண்டி சாலை - அண்ணா பேருந்து &nbsp;நிலைய சந்திப்பில் தொடங்கி ஆவின் &nbsp;சந்திப்பு, மேலமடை சந்திப்பு வழி யாக மதுரை சுற்றுச் சாலையில் இணைந்து, அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் முடிவடையும் இச்சாலை, மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் அதிகமான கல்வி நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன. போக்குவரத்துச் செறிவு அதிகமாக உள்ள காரணத் தினால் இப்பகுதியில் உள்ள மூன்று &nbsp;சந்திப்புகளிலும் மிகுந்த போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வாக னங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் &nbsp;சூழ்நிலை நிலவிவந்தது. மக்களுக்கு &nbsp;ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையிலும், நெரிசலின்றி வாக னங்கள் செல்லும் வகையிலும் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 950 மீட்டர் நீளமுள்ள இந்த முக்கியமான மேம்பாலத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளை யரை எதிர்த்து வீரப்போர் புரிந்து &nbsp;வெள்ளையரிடம் இருந்து சிவகங் கையை மீட்டு சிறப்பான ஆட்சி புரிந்த வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.