முந்தய பக்கம்

மின் இணைப்புக்காக காத்திருக்கும் புதிய குடிநீர் திட்டம்

19 Jan 2026, 2:23 pm
மின் இணைப்புக்காக காத்திருக்கும் புதிய குடிநீர் திட்டம்
<p><strong>மின் இணைப்புக்காக காத்திருக்கும் புதிய குடிநீர் திட்டம்</strong></p> <p>மே.பாளையம், ஜன.19- மேட்டுப்பாளையம் நக ராட்சியின் புதிய விளாமரத் தூர் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்தும் மின் இணைப்பு கிடைக்காததால் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி யின் குடிநீர் விரிவாக்க திட்ட &nbsp;பணிக்காக தமிழக அரசு ரூபாய் 22.20 கோடி ஒதுக்கீடு செய்தது. &nbsp;இதனையடுத்து பவானி ஆற்றங்கரை யோரம் உள்ள விளாமரத்தூர் என்னுமிடத் தில் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க நீரேற்று &nbsp;நிலையம், பத்து லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை தொட்டி, சாமண்ணா சுத்தீகரிப்பு நிலையம் வரை குழாய்கள் பதிக்கும் பணி ஆகியவை முடிவடைந்து வெள்ளோட்டமும் நடந்து முடிந்துள்ளது. ஆனால், மின் இணைப்பு கிடைக்காத கார ணத்தால் பணிகள் முடிந்து மூன்று மாதங்க ளுக்கு மேலாகியும் இந்த குடிநீர் திட்டம் இன் னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் மேட்டுப்பாளையம் நகர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. &nbsp;இதுகுறித்து மேட்டுப்பாளையம் நக ராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, &ldquo;மின் இணைப்பு பெறுவதற்கு &nbsp;நகராட்சி சார்பில் மின் வாரியத்திற்கு பணம் &nbsp;செலுத்தி விட்டு இணைப்பிற்காக காத்திருக் கின்றோம்&rdquo; என்றனர். மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, முழுமையான விளக் கம் ஏதும் கொடுக்காமல் &ldquo;குடிநீர் திட்டப்பணி களுக்கு விரைவில் மின்சார இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்&rdquo; என்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram