தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுதில்லி மே 3ஆம் தேதி  நீட் தேர்வு மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

8 Feb 2026, 3:06 pm
புதுதில்லி மே 3ஆம் தேதி  நீட் தேர்வு மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்
<p><strong>புதுதில்லி மே 3ஆம் தேதி &nbsp;நீட் தேர்வு மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்</strong></p> <p>எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய &nbsp;தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ் வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி &nbsp;நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை ஞாயிறன்று அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பில், 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு, ஞாயி றன்று (பிப்., 8) முதல் மார்ச் 8ஆம் தேதி &nbsp;வரை விண்ணப்பிக்கலாம். தமிழ், ஆங்கி லம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த &nbsp;நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். விண் &nbsp;ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 10 முதல் மார்ச் 12ஆம் தேதி காலக்கெடு &nbsp;உள்ளது. மே.3ஆம் தேதி (ஞாயிறு) பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த &nbsp;தேர்வு நடைபெறுகிறது. நீட் நுழைவுத் தேர்வுக்கு www.neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட் &nbsp;டுள்ளது. தேர்வு கட்டணம் நீட் நுழைவுத் தேர்வு எழுத தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் யாருக்கும் விலக்கு கிடையாது. பொதுப் &nbsp;பிரிவினருக்கு ரூ.1,700, ஓபிசி பிரிவின ருக்கு ரூ.1,600, எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திற னாளிகள் / மூன்றாம் பாலினத்தவர் களுக்கு ரூ.1,000 என கட்டணம் வசூலிக் &nbsp;கப்படுகிறது. வெளிநாட்டு மையங்களில் தேர்வு எழுத விரும்பவோர்கள் ரூ.9,500 &nbsp;தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க &nbsp;வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;ஜெய்ப்பூர் ஓடும் ரயிலில் தீவிபத்து நூலிழையில் தப்பிய &ldquo;ஸ்வர்ன் எக்ஸ்பிரஸ்&rdquo; தில்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் நோக்கி &ldquo;ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ்&rdquo; ரயில் &nbsp;சென்று கொண்டு இருந்தது. &nbsp;ஞாயிறன்று காலை 9 மணியளவில், ஜேத்தா சந்தன் அருகே ரயிலின் ஒரு பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை மற்றும் நெருப்பு வந்ததைக் கண்ட &nbsp;பயணிகள் உடனடியாக ரயில்வே ஊழி யர்களுக்குத் தகவல் அளித்தனர். ஆபத்தை உணர்ந்த லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார். ரயில்வே ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை விரை வாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். &nbsp;நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்த &nbsp;உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்பட வில்லை. தீ அணைக்கப்பட்ட பிறகு, ரயில் &nbsp;மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. லோகோ பைலட்டின் துரித நடவடிக்கையால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என் பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.