முந்தய பக்கம்

விஷமங்கலத்தில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு

29 Nov 2025, 4:58 pm
விஷமங்கலத்தில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு
<p><strong>விஷமங்கலத்தில் புதிய சமுதாயக்கூடம் திறப்பு</strong></p> <p>திருப்பத்தூர், நவ.29- திருப்பத்தூர் மாவட்டம், விஷமங்கலம் ஊராட்சி அங்கநாத வலசை கிராமத்தில் புதியதாக கட்டப் &nbsp;பட்டுள்ள சமுதாயக்கூட கட்டிடத்தை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் (2024-2025) ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் &nbsp;பட்ட சமுதாயக்கூட கட்டி டத்தின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தர வல்லி தலைமையில் நடை பெற்றது. அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அ.நல்லதம்பி, க.தேவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram