முந்தய பக்கம்

மணிப்பூரில் புதிய முதல்வர்

4 Feb 2026, 3:49 pm
மணிப்பூரில் புதிய முதல்வர்
<p><strong>மணிப்பூரில் புதிய முதல்வர்</strong></p> <p>மணிப்பூர் மாநிலத்திற்கு புதிய முதலமைச்சராக மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் யும்நம் கேம்சந்த் சிங் (62) அறிவிக்கப்பட்டுள்ளார். &nbsp; மணிப்பூரில் கடந்த 2023 மே 3 அன்று மெய்டெய் மற்றும் குக்கி இன மக்களிடையே &nbsp;உருவாக்கப்பட்ட இனக் கலவரத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்தனர். 60 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். &nbsp;இந்தச் சூழலில் எழுந்த கடும் அழுத் தம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக &nbsp;2025 பிப்ரவரி 9 அன்று &nbsp;பாஜக முதலமைச்சர் பைரேன் சிங் தனது பதவியை ராஜி னாமா செய்தார். இதனால் அங்கு குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. உட்கட்சி பூசலால் &nbsp;புதிய முதல மைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் ஓராண்டு காலமாக நீடித்து வந்த சிக்கல் முடிந்துள்ள நிலையில் புதிய அரசு பதவி ஏற்க ஏதுவாக மணிப்பூரில் நடை பெற்று வரும் ஜனாதிபதி ஆட்சியை திரும்பப் பெறுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram