புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு
6 Jul 2026, 11:25 pm
<p><strong>புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு</strong> </p><p>சிதம்பரம், ஜூலை 6- சிதம்பரம் வட்டாட்சியராகச் சதீஷ்குமார் திங்களன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சிதம்பரம் வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஹரிதாஸ், கடலூர் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி வந்த சதீஷ்குமார், புதிய வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். புதிய வட்டாட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சதீஷ்குமாரை, அலுவலக ஊழியர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.</p>
